மனைவின் கையை கட்டி, போட்டு மிதித்து, கத்தி கொண்டு தலைமுடி கொடூரமாக அறுக்கும் கணவர்.. வைரலாகும் வீடியோ..

Published : May 25, 2022, 04:49 PM IST
மனைவின் கையை கட்டி, போட்டு மிதித்து,  கத்தி கொண்டு தலைமுடி கொடூரமாக அறுக்கும் கணவர்.. வைரலாகும் வீடியோ..

சுருக்கம்

பெண் ஒருவரின கைகள்‌ பின்னால் கட்டப்பட்டு உள்ள நிலையில், ஆண் ஒருவர் கொடூரமாக அவரது தலைமுடியை அறுக்கும்‌ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்‌ வைரலாகப்‌ பரவி வருகிறது.   

பெண் ஒருவரின கைகள்‌ பின்னால் கட்டப்பட்டு உள்ள நிலையில், ஆண் ஒருவர் கொடூரமாக அவரது தலைமுடியை அறுக்கும்‌ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்‌ வைரலாகப்‌ பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் பெண் ஒருவர், அவரது இரு கைகளும் கயிறால் பின்னால் கட்டப்பட்ட நிலையில், அவர் தரையில் அமர்ந்திருக்கிறார். அவரது அருகில் உள்ள ஆண் நபர் ஒருவர் அந்த பெண்ணை கண்மூடித்தனமாக அடித்து உதைக்கிறார்.
பின்னர் கத்தரிக்கோலை எடுத்து வந்து அந்த பெண்ணின் தலைமுடியை வெட்டுகிறார்.

அது சரியாக வெட்டாத நிலையில் ஆத்திரத்தில் கத்திக்கொண்டு வந்து முடியை அறுக்கிறார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. முடியை அறுக்கும்‌ நபர்‌ கார்த்தி என்பதும்‌ அந்த பெண்ணின்‌ பெயர்‌ பானு என்பதும்‌ தெரியவந்துள்ளது. இருவரும் கணவம் மனைவில் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க: காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் மனைவி.. தினம் கதவை சாற்றிக் கொண்டு கணவனை புரட்டி எடுத்து வெறித்தனம்.

மேலும்‌ இவர்கள்‌ இருவருமே இரண்டாம்‌ திருமணம்‌ செய்தவர்கள்‌ என்று கூறப்படுகிறது. அதாவது கார்த்திக்கு பானு இரண்டாவது மனைவி என்பதும்‌, பானுவிற்கு கார்த்தி இரண்டாவது கணவர்‌ என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்‌ இருவருக்கும்‌ ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள்‌ பிரிந்து வாழ்வதாகவும்  தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நிலையில் பானுவை தேடி கண்டுபிடித்து கார்த்திக், அந்த பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு, அவரது தலை முடியை அறுக்கும் கொடூரத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இவற்றுடன், அந்த பெண் பானுவை, கார்த்திக் கம்பியால் தாக்கி மிகவும் கொடுமைப்படுத்தாகவும் சொல்லப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு தான் வடபழனியில் தங்கியிருந்த பானு, வேறு இடத்திற்கு காலி செய்து சென்றதாகவும் சொல்லப்படுகிறது. பெண்ணின்‌ கைகளை கட்டி அவரது தலைமுடியை அறுக்கும்‌ இந்த விடியோ சமூக வலைத்தளங்களில்‌ தீயாய்‌ பரவி வருகிறது.
 

மேலும் படிக்க: ராமேஸ்வரம் பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை... இறால் பண்ணைக்கு சீல்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது