நினைக்கும் போதெல்லாம் உல்லாசம்.. தட்டிக்கேட்ட கணவரை தட்டித்தூக்கிவிட்டு நாடகமாடிய மனைவி.. சிக்கியது எப்படி?

By vinoth kumar  |  First Published Jul 27, 2024, 10:34 AM IST

கவுஷா பாஷா சரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


கள்ளக்காதலை கண்டித்த கணவனை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்துது சிறையில் அடைத்தனர். 

சென்னை வில்லிவாக்கம் சிக்கோ நகர் 57-வது தெருவைச் சேர்ந்தவர் கவுஷா பாஷா (48). இவரது மனைவி ஷாஜிதா பானு. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கவுஷா பாஷாவுக்கு நுரையீரல் நோய், சர்க்கரை நோய் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் அவர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துது விட்டதாக அவரது மனைவி ஷாஜிதா பானு கூறினார். இதனிடையே கவுஷா பாஷா சரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: இதுதான் நல்ல சான்ஸ்! இப்ப வந்தா ஆம்ஸ்ட்ராங் போட்றலாம்! கொலையாளிகளுக்கு இன்பார்ம் கொடுத்த பீரதிப்! யார் இவர்?

இந்நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில், கவுஷா பாஷா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரது மனைவி ஷாஜிதா பானுவிடம் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பகீர் தகவல் வெளியானது. 

இதையும் படிங்க:  பள்ளி மாணவனை கரெக்ட் செய்து டியூசன் ஆசிரியை உல்லாசம்! விஷயம் தெரிந்த பெற்றோர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாஜிதா பானு பாலியல் வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அவருக்கு பலருடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விவகாரத்தை அறிந்த கணவர் கவுஷா பாஷா மனைவி கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த மனைவி  ஷாஜிதா பானு  கணவர் என்று கூட பாராமல் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கணவனை கொலை செய்த ஷாஜிதா பானுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

click me!