சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஜம்மு காஷ்மீரீல் கிளையை திற்ந்து மக்களின் பணத்தை பெற்று சுமார் 59 கோடி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனது அலுவலகங்களைக் கொண்டு, நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பணத்தை முதலீடாக பெற்றதாக கூறப்படுகிறது. முதலீடு செய்யும் பணத்தை 15 நாட்களில் இரட்டிப்பாக தருவதாகக்கூறி பணம் பெற்றுள்ளனர்.
'குரேடிவ் சர்வே' என்ற நிறுவனம், சமூக ஊடகங்களில் சிறப்பாக செயல்படுபவர்களை பயன்படுத்தி, மகளக்களின் நம்பிக்கையைப் பெறவும், அவர்களை முதலீடுகளில் ஈடுபடுத்தவும் செய்தது. அதன் மூலமாக நிறுவனம் சுமார் 59 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக காஷ்மீர் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று காஷ்மீர் பிரிவு ஆணையர் வி கே பிதுரி தெரிவித்தார். மேலும், ஆன்லைன் பண மோசடி தொடர்பாக மோசடி நிறுவனத்தின் அலுவலகங்கள் உட்பட பல சொத்துக்களுக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
“குரேடிவ் சர்வே பிரைவேட் லிமிடெட்” என்ற பெயரிலும், மோசடியான இணையதளம் மூலமாகவும் நிறுவனம் செயல்பட்டு வருவதாக பணத்தை இழந்த பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.