சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52) 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் (52) 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
undefined
இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர் போல வந்து ஆம்ஸ்ட்ராங்கை பழிதீர்த்த கும்பல்.. கொலைக்கான பின்னணி என்ன? பகீர் தகவல்கள்?
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு உள்ளிட்ட 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த வழக்கில் சரணடைந்த ஆற்காடு சுரேசின் தம்பி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அண்ணன் ஆற்காடு சுரேசின் பிறந்தநாள் அல்லது நினைவு நாளுக்கு ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். இந்த சூழலில் ஜெயபால் மற்றும் ஆம்ஸ்ராங்கின் ஆதரவாளர்கள் தனக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதையும் படிங்க: BSP Party Armstrong Murder Case: தலைநகரை அலறவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்! சரணடைந்த 8 பேர் யார் தெரியுமா?
தன்னை கொல்வதற்கு முன்னர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய ஆற்காடு பாலு ஸ்கெட்ச் போட்டுள்ளார். அதன்படி தென்னரசு கொலை வழக்கில் தன்னோடு சிறையில் இருந்தவர்கள், சுரேசின் கிளப் ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உடன் சேர்ந்து கொலை செய்ததாகவும், ஆற்காடு சுரேசின் பிறந்தநாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாகவும் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.