உணவு டெலிவரி ஊழியர் போல வந்து ஆம்ஸ்ட்ராங்கை பழிதீர்த்த கும்பல்.. கொலைக்கான பின்னணி என்ன? பகீர் தகவல்கள்?

By vinoth kumar  |  First Published Jul 6, 2024, 8:02 AM IST

உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடையில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை  செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைநகர் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். 


சென்னையில் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் மாநிலத் தலைவரும் வழக்கறிஞருமான கட்சியின் ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

சென்னை பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வந்தவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் (52). இவர் பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது உணவு டெலிவரி ஊழியர்கள் போல சீருடையில் வந்த கும்பல் திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி படுகொலை  செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இந்த சம்பவத்தை அடுத்து தலைநகர் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டனர். 

Latest Videos

undefined

இதையும் படிங்க: BSP Party Armstrong Murder Case: தலைநகரை அலறவிட்ட ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம்! சரணடைந்த 8 பேர் யார் தெரியுமா?

இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதனிடையே அண்ணாநகர் காவல் நிலையத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆம்ஸ்ட்ராங்க் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். 2012ல் அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டது. மாயாவதிக்கு நெருக்கமானவராக இருந்து வந்தார். தமிழகத்தில் அனைத்து தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்து போட்டியிட்டு வந்தது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு நரசிம்ம நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற ஆற்காடு சுரேஷ்(44). பிரபல ரவுடியான இவர் மீது ராதாகிருஷ்ணன், சின்னா மற்றும் வழக்கறிஞர் பகத்சிங் கொலை வழக்கு உட்பட 6 கொலை வழக்கு, 25 கொலை முயற்சி,  வழிபறி, ஆட்கடத்தல் என 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 8 முறை போலீசார் குண்டர் சட்டத்தில் ஆற்காடு சுரேஷ் கைது செய்யப்பட்டவர். 

இதையும் படிங்க:  சென்னை மெரினாவில் பயங்கரம்! சினிமா பாணியில் கூலிப்படை தலைவன் படுகொலை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.!

இந்நிலையில் தனது நண்பர் மாதவனுடன் காரில் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீனவன் உணவகம் என்ற ஓட்டலுக்கு வந்தார். கடற்கரை மணலில் அமர்ந்து ரவுடி சுரேஷ் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.  அப்போது காரில் வந்த கும்பல்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரவுடி ஆற்காடு சுரேஷ் படுகொலை செய்துவிட்டு தப்பியது. அவருடன் இந்த மாதவன் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினார். 

இந்த கொலையில், டெய்லர் செந்தில், ஜான் கென்னடி, ஜெயசந்திரன், சைதை சந்துரு  உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது பாம்சரவணன் என்ற ரவுடியும் சம்பவ இடத்துக்கு வந்தது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார். பாம்சரவணனுடன், ஆம்ஸ்ட்ராங்கும், காரில் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்ததாகவும், காரில் அவர் இருப்பதுபோல காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில், ஆம்ஸ்ட்ராங்க் கைது செய்யப்படவில்லை. இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியான மாதவனையும் கடந்த ஜனவரி மாதம் 14ம் தேதி அந்த கும்பல் வெட்டி சாய்த்தது.  

இந்நிலையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பின்னால் ஆம்ஸ்ட்ராங் இருப்பதாக சந்தேதகிக்கப்பட்டனர். ஆகையால் ஆற்காடு சுரேஷின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆம்ஸ்ட்ராங்கை தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், தான் சென்னை பெரம்பூர் அவரது வீட்டருகே வைத்து ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை  செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பட்டினப்பாக்கம் கொலைக்கு பழிக்கு பழியாக தான் இந்த கொலை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

click me!