என் பொண்டாட்டிய வைச்சுக்க வேணாம்னு சொல்லியும் கேட்கல... ஜோதிடருக்கும் மனைவிக்கும் கொடூரம் காட்டிய கணவன்..!

Published : Jun 16, 2020, 12:17 PM IST
என் பொண்டாட்டிய வைச்சுக்க வேணாம்னு  சொல்லியும் கேட்கல... ஜோதிடருக்கும் மனைவிக்கும் கொடூரம் காட்டிய கணவன்..!

சுருக்கம்

வேலைக்கு வைத்திருந்ததால் சொல்லியும் கேட்காமல் சென்னையில் ஜோதிடரை அவரது பெண் உதவியாளரின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

வேலைக்கு வைத்திருந்ததால் சொல்லியும் கேட்காமல் சென்னையில் ஜோதிடரை அவரது பெண் உதவியாளரின் கணவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரை சேர்ந்தவர் அர்ஜூனன். இவர் வேளச்சேரியில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இவரது அலுவலகத்தில் உமாமகேஸ்வரி என்பவர் கடந்த 3 மாதங்களாக பணியாற்றி வருகிறார். உமாமகேஸ்வரிக்கும், அவரது கணவர் ஸ்ரீதருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் உமாமகேஸ்வரியை வேலைக்கு செல்ல வேண்டாம் என கணவர் ஸ்ரீதர் கண்டித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 13ம் தேதி மதியம் ஸ்ரீதர், ஜோதிட நிலையம் வந்துள்ளார். அப்போது அவர் ‘என் மனைவியை வேலைக்கு வைக்காதே என பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை’என சொல்லிக்கொண்டே மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோதிடர் அர்ஜூனனை சரமாரியாக குத்தியுள்ளார். அப்போது அதைத் தடுக்க வந்த உமாமகேஸ்வரியின் வாய் மற்றும் கழுத்தில் கத்திக் குத்து விழுந்துள்ளது.

இதனை அடுத்து ஸ்ரீதர் அங்கிருந்து தப்பியுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!