ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை..! தொடரும் பேருந்து கொடூரங்கள்

Published : Dec 10, 2021, 06:22 PM IST
ஓடும் பேருந்தில் பாலியல் தொல்லை..! தொடரும் பேருந்து கொடூரங்கள்

சுருக்கம்

விழுப்புரத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப்பேருந்து நடத்துனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பேருந்து நடத்துனர் , ஓட்டுனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

விழுப்புரத்தில் நேற்று இரவு கொத்தமங்கலம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு , பேருந்து நடத்துனர் சிலம்பரசன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுக்குறித்து  மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், பேருந்து நடத்துனர் சிலம்பரசனை கைது செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர் அருள்செல்வனிடம் விசாரணை நடத்தினர். அதில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நடத்துனரை தட்டி கேட்காமல், ஓட்டுனர் அருள்செல்வன் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் ஓட்டுநர் அருள்செல்வன் மற்றும் நடத்துனர் சிலம்பரசனை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அடுத்தடுத்து அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சர்ச்சைகளில் சிக்குவதும், அவர்களை பணியிடை நீக்கம் செய்வதும் வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது. அரசு பேருந்துகளில் நடத்துனர் மறும் ஓட்டுனர்கள் பயணிகளிடம் தவறான மற்றும் இழிவாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கிறது. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பேருந்து நிலையத்தில் மீனவ பெண், அவர் வைத்திருந்த மீன் கூடை நாறுவதாகக் கூறி அரசு பேருந்தில் இருந்து நடத்துனரால் இறக்கிவிடப்பட்டார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அரசு பேருந்தின் நடத்துனர், ஓட்டுனர், நேர கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மீண்டும் அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே அரசு பேருந்தில் இருந்து நரிக்குறவர் குடும்பத்தினர் அவர் உடைமைகள் தூக்கி ஏறியப்பட்டு, பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட காட்சி வைரலானது .அதில் சின்ன குழந்தை ஒன்று பேருந்தின் அருகே கதறி அழுத காட்சி காண்போரை கலங்க வைக்கும் விதமாக இருந்தது. இந்த சம்பவத்திலும் அரசு பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் விழுப்புரத்தில் அரசு பேருந்தில் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.நேற்றிரவு விழுப்புரத்திலிருந்து கோனூர் என்ற ஊருக்கு சென்ற கொண்டிருந்த அரசு பேருந்தில் கல்லூரி மாணவிக்கு நடத்துனர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். விழுப்புரத்தில் இருந்து ஒரு கல்லூரி மாணவி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட பயணிகள் அந்த பேருந்தில் பயணம் செய்தனர். பேருந்தில் நடத்துனராக சிலம்பரசன் என்பவரும், ஓட்டுனராக அன்புச்செல்வன் என்பவரும் பணியில் இருந்தனர். இந்த நிலையில் விழுப்புரத்தில் இருந்து பேருந்து, பத்து கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் பயணித்த அனைவரும் பெரும்பாக்கம் என்கிற கிராமத்தில் இறங்கி விட்டனர்.

பேருந்தில் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் 20 வயது மாணவி ஒருவர் மட்டும் தனியாக இருந்துள்ளார். பேருந்து ஆள் அரவமற்ற சாலையில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த நடத்துனர் சிலம்பரசன் அந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவுகொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதனை பேருந்தில் ஓட்டுனராக இருந்த அன்புச் செல்வன் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த மாணவி பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்நிலைய போலீசார் அரசு பேருந்து நடத்துனர் சிலம்பரசனை கைது செய்தனர். மேலும் நடத்துனரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்த அரசு பேருந்து ஓட்டுனர் அன்புச்செல்வனை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். பேருந்தில் அதிக அளவு கூட்டம் இல்லாததால் தனியாக அமர்ந்திருந்த இளம்பெண்ணுக்கு நடத்துனர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி