குடித்துவிட்டு தினமும் தகராறு; காதல் கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்த பெண் - திருச்சியில் பரபரப்பு

By Velmurugan s  |  First Published Dec 27, 2023, 4:55 PM IST

திருச்சி மாவட்டம் துறையூரில் தினமும் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த காதல் கணவனை மனைவியே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மாவட்டம், துறையூர் தேவாங்க நகர் பகுதியில் வசித்தவர் அண்ணாதுரை. இவர், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பத்மினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் லலிதா என்ற மற்றொரு பெண்ணையும் இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 

மேலும் முதல் மனைவி பத்மினி வீட்டின் முதல் தளத்திலும், இரண்டாவது மனைவி லலிதாவை கீழ் வீட்டிலும் குடி வைத்து ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் அண்ணாதுரைக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து பத்மினி மற்றும் லலிதாவிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

undefined

தேனியில் 75 வயது மூதாட்டி கதற கதற கற்பழிப்பு; காமவெறியனை மடக்கி பிடித்த பொதுமக்கள் - மூதாட்டி கவைலக்கிடம்

இந்நிலையில் சம்பவத்தன்று  குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த அண்ணாதுரை முதல் மனைவி பத்மினியிடம் சென்று தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பத்மினி கயிற்றால் கணவரின் கழுத்தை இறுக்கி உள்ளார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் பத்மினியை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!