பெரியகுளம் அருகே 75 வயது மூதாட்டியை கற்பழித்த நபரை அப்பகுதி மக்கள் மடக்கி பிடித்து காவல்துறை வசம் ஒப்படைத்தனர். மூதாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டி காலனி பகுதியில் வசித்து வந்தவர் ராமர் மனைவி பேச்சியம்மாள் (வயது 75). இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் வசித்து வந்தார். மகள் மகாலட்சுமி பெரியகுளம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம்போல பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மகாலட்சுமி வேலைக்கு சென்று விட்டு இரவு சுமார் 7.30 மணியளவில் மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி பேச்சியம்மாளை அதே பகுதியைச் சேர்ந்த காட்டு ராமன் மகன் அமாவாசை (45) என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்ததைக் கண்டு மகாலட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில் அமாவாசையிடம் இருந்து தனது தாய் பேச்சியம்மாளை காப்பாற்றுவதற்காக சென்று அம்மாவாசையை பிடித்து இழுத்த போது அமாவாசை மகாலட்சுமியை உருட்டு கட்டையால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
undefined
திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயத்தில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆருத்ரா மகா அபிஷேகம்
மகாலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தப்பிச்சென்ற அமாவாசையை மடக்கி பிடித்து தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் அமாவாசையை அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர். இது தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சின்னாறு சோதனை சாவடியை காட்டு யானைகள் முகாமிட்டதால் வனத்துறையினரும், வாகன ஓட்டிகளும் அச்சம்
மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டி பேச்சியம்மாள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உடலில் பலத்த காயம் இருப்பதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து ஆய்வாளர் மீனாட்சி, ஆய்வாளர் அன்னமயில் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D