தங்கையை காதலித்த நபரை காரில் கடத்திய அண்ணன்... சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்!!

Published : Jul 06, 2022, 07:14 PM IST
தங்கையை காதலித்த நபரை காரில் கடத்திய அண்ணன்... சினிமாவை மிஞ்சிய நிஜ சம்பவம்!!

சுருக்கம்

தங்கையை காதலித்த இளைஞரை சினிமாவை போல அண்ணன் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தங்கையை காதலித்த இளைஞரை சினிமாவை போல அண்ணன் காரில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீர். 19 வயதான இவரும் இவரது தங்கையும், தருமபுரி பகுதியை சேர்ந்த மாதேஸ் என்பரும், பாலக்கோடு அரசு கலைக்கல்லூரியில் படித்து வந்தனர். இதில் மாதேஸும் அமீரின் தங்கையும் நட்பாக பழகி வந்த நிலையில் அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் இவர்களின் காதல் விவகாரம் அமீருக்கு தெரியவந்ததை அடுத்து அவர் தனது தங்கையை கண்டித்துள்ளார். ஆனால் அவர் காதலன் மாதேஸ்சிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அமீர், மாதேசை கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் காதலை கைவிடுவதாக தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்து மாதேசை கொலை செய்ய அமீர் தனது நண்பர்கள் மூலம் திட்டம் தீட்டினார்.

இதையும் படிங்க: நடு ராத்திரியில் நடிகையின் அறைக்குள் நுழைந்த இளைஞர்.. கதவை பூட்டிக் கொண்டு உல்லாசம்.. போலீசில் கதறல்.

இதனால்அமீர், தனது நண்பர்களுடன் நேற்று மாலை ஒரு கார், ஒரு மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு கல்லூரிக்கு வந்தார். அப்போது கல்லூரி முடிந்து வெளியே நின்று கொண்டிருந்த மாதேசை, அமீர் கும்பல் காரில் தூக்கி சென்றனர். மாதேசின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த சக மாணவர்கள், பைக்கில் வந்த அமீரின் நண்பர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இது தொடர்பாக சிக்கிய அமீர் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் காதல் விவகாரத்தில் மாதேசை கடத்தி கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது தெரியவந்தது. உடனே போலீசார் சூளகிரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்தனர்.

இதையும் படிங்க: 3 பொண்டாட்டி கட்டியும் துப்பு இல்ல.. இளம் மனைவிக்கு ஏற்பட்ட விபரீத தொடர்பு.. குடும்பமே சேர்ந்து கொன்ற கொடூரம்

அப்போது மாதேசை கடத்தி வந்த வாகனத்தை மறித்தனர். ஆனால் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர். உடனே போலீசார் சுற்றி வளைத்து காரில் இருந்த அமீர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து மாதேசை மீட்டனர். இது பற்றி பாலக்கோடு போலீஸ்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் பாலக்கோடு போலீசார் சூளகிரிக்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசார் தாங்கள் பிடித்து வைத்திருந்த அமீர் மற்றும் கூட்டாளிகளை பாலக்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாதேசையும் போலீசார் மீட்டு வந்தனர். இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து அமீர் அவரது நண்பர்கள் என 4 பேரை போலீசாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய தங்கை.. பதறிய அக்கா கவிப்பிரியா.. ரத்த வெள்ளத்தில் பிரசாத் அலறல்.. நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?