காதலித்து கதற கதற உறவு கொண்ட மாமன்..!! மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்..!!

Published : Dec 19, 2019, 02:27 PM IST
காதலித்து கதற கதற  உறவு கொண்ட மாமன்..!!  மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற கொடூரம்..!!

சுருக்கம்

என்னை உடலுறவுக்கு அழைத்தார் ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை எனவே என்னை வலுகட்டாயபமாக பாலியல் வன்புணர்வு செய்ததுடன் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ணெயை என் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார்

இரண்டு ஆண்டுகளாக  காதலித்து வந்த மாமனே பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து அந்தப் பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  உத்திரபிரதேசம் மாநிலம் ஃபதேபூர் மாவட்டத்திலுள்ள உபிபூர்  கிராமத்தில் இக்கொடுமை நடந்துள்ளது . மாமன்  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் அந்தப் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது .  18 வயதான அந்த பெண் 90  சதவீத தீக்காயங்களுடன் கடந்த சனிக்கிழமை மாலை கான்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது .  அவள் உடல் முழுவதும் எரிந்து பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் செயலிழந்த நிலையில் இருந்தன அப்பொழுது வாக்குமூலம் கொடுத்த  அந்த பெண் ,  தூரத்து  சொந்தமான மாமன் முறையில் இருந்த   28 வயது  இளைஞரை கடந்த  இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும்,   எங்கள் காதல் விவகாரம் கிராம மக்களுக்கு தெரியவர ஊர் பஞ்சாயத்தார்  காதலர்கள் இருவரும் பிரிந்து இருக்கும்படியும் தன்னை காதலித்து வந்த மாமன் இனி தன்னை  சந்திக்கக்கூடாது என ஊர் தீர்மானம் போடப்பட்டதாக தெரிவித்தார். இதனால் இருவரும் பிரிந்து  இருந்த நிலையில் ,  மாமன் வீட்டிற்கு வந்தார்.  

என்னை உடலுறவுக்கு அழைத்தார் ஆனால் நான் அதற்கு உடன்படவில்லை எனவே தன்னை வலுகட்டாயபமாக பாலியல் வன்புணர்வு செய்ததுடன் மறைந்து வைத்திருந்த மண்ணெண்ணெயை என் உடல் மீது ஊற்றி தீ வைத்து எரித்தார் என்று அந்த பெண் தெரிவித்தார்.  இந்நிலையில் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார் . அதனையடுத்து பெண்ணிண் தந்தை  மற்றும் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் இந்நிலையில் இப்புகார் அடிப்படையில் போலீசார் எப்ஐஆர் பதிவு செய்யது கொலைகார மாமனை தேடி வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?