இரண்டு வாரம் குடும்பம் நடத்தி கர்பம்..!! கேள்விமேல் கேள்வி கேட்கும் மாமியார்..!!

Published : Dec 18, 2019, 06:11 PM IST
இரண்டு வாரம் குடும்பம் நடத்தி கர்பம்..!!  கேள்விமேல் கேள்வி கேட்கும் மாமியார்..!!

சுருக்கம்

ஆனால் குழந்தையை முருகன் வீட்டார்   யாரும்  வந்து  பார்க்கவில்லை .  அதேநேரத்தில் தேன்மொழியையும்  முருகன் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் . 

நடத்தையில் சந்தேகப்பட்டு தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிய கணவருடன் சேர்த்து வைக்க வேண்டுமென பெண்ணொருவர் கைக்குழந்தையுடன் மாமியார் வீட்டின் முன்பு தர்ணாவில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  தென்காசி மாவட்டம் கடையம் அருகே கட்டேரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் மகன் முருகன் இவருக்கும்  அதே பகுதியை சேர்ந்த  தேன்மொழி  என்பவருக்கும்  கடந்த பிப்ரவரி மாதம் 15ம் தேதி இருவருக்கும்  திருமணம் நடந்தது .  பதினைந்து நாட்களில்  முருகன் இந்தோனேஷியாவிற்கு வேலைக்காக சென்றுள்ளார். 

இந்நிலையில்  மாமியார் வீட்டில் வசித்துவந்த தேன்மொழி மார்ச் 8 ஆம் தேதி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர் .  இந்நிலையில் தேன்மொழியின் மீது சந்தேகப்பட்ட அவரது மாமியார்  தன்னுடைய மகனுடன் குடும்பம் நடத்திய இரண்டு வாரத்தில் எப்படி கர்ப்பமாக்கி இருக்க முடியும் அது என் மகனின் வாரிசு இல்லை என்று  கூறி தேன்மொழியை வீட்டைவிட்டு வெளியேற்றினார் .  இந்நிலையில் மகன் முருகனும் தாய் சொல்வதைப் போலவே கேட்டு மனைவி தேன்மொழி மீது  சந்தேகப்பட்டதுடன் அவருடன் பேசுவதையும் நிறுத்திக்கொண்டார்.  இதனால் தேன்மொழி  கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்தார் . இந்நிலையில்  நவம்பர் மாதம் ஆறாம் தேதி தேன்மொழிக்கு பெண் குழந்தை பிறந்தது .  ஆனால் குழந்தையை முருகன் வீட்டார்   யாரும்  வந்து  பார்க்கவில்லை .  அதேநேரத்தில் தேன்மொழியையும்  முருகன் குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் . 

 

இந்நிலையில் கைக்குழந்தையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்த  தென்மொழி இன்று காலை கணவர் வீட்டின் முன்னால் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .  அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர் முருகன்தான் என்னுடைய குழந்தைக்கு அப்பா,  தன்னையும் குழந்தையையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் .  டிஎன்ஏ சோதனை செய்தால் அவர்தான் என் குழந்தையின்  தந்தை என்கிற உண்மை தெரியும் என்றார்.  இதுகுறித்து கடையம் போலீசார் தேன்மொழியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?