குடியரசு தினத்தில் பயங்கரம்..! அசாமில் குண்டு வெடிப்பு..!

By Manikandan S R SFirst Published Jan 26, 2020, 4:45 PM IST
Highlights

இன்று காலையில் அசாம் மாநிலத்தில் வெடிகுண்டு வெடித்தது. அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கடை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. 

தேசத்தின் 71 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். குடியரசு தின சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ கலந்த கொண்டார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள்,முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலையில் அசாம் மாநிலத்தில் வெடிகுண்டு வெடித்தது. அசாம் மாநிலத்தின் திப்ரூகார் நகரில் கிரகாம் பஜார் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் கடை ஒன்றில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்துச் சிதறியது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த போலீசார் உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர். வெடிகுண்டு வெடித்தது குறித்து மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவம் அசாமில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read: கம்பீரமாய் வந்த அய்யனார்..! தமிழ்ச் சமூகத்தின் காவல் தெய்வத்தை பெருமைபடுத்திய மோடி அரசு..!

click me!