வரும்போது மதுவையும் வாங்கி வந்து, வீட்டில் வைத்து குடித்து அப்பெண்ணுடன் உல்லாசம் முதியவர் மாரி அனுபவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சுடலை ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த மாரி நன்றாக தூங்கியிருக்கிறார். அந்த நேரத்தில் குழந்தையை அழைத்து கொண்டு இளம்பெண் மாயமாகிவிட்டார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இருக்கும் அரசன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுடலை ராஜன். இவரது மனைவி இசக்கி. இந்த தம்பதியினருக்கு மகாலட்சுமி என்கிற 3 வயது மகள் இருக்கிறாள். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். சுடலை ராஜன், தனது தந்தை மாரி மற்றும் மகள் மகாலட்சுமியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்.
கடந்த இருதினங்களுக்கு முன் மாரி, தனது பேத்தியை அழைத்து கொண்டு பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், மாரியிடம் தான் ஆதரவற்றவர் என்றும், தன்னை அழைத்து சென்றால் குழந்தையை நன்றாக பார்த்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். மாரியும் அப்பெண் மீது சபலம் கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வரும்போது மதுவையும் வாங்கி வந்து, வீட்டில் வைத்து குடித்து அப்பெண்ணுடன் முதியவர் மாரி உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சுடலை ராஜன் வேலைக்கு சென்றுள்ளார். மதுபோதையில் இருந்த மாரி நன்றாக தூங்கியிருக்கிறார். அப்போது குழந்தையை அழைத்து கொண்டு இளம்பெண் மாயமாகிவிட்டார்.
கண்விழித்து பார்த்த போது பேத்தியையும் அப்பெண்ணையும் காணாது திகைத்தார். பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தனது மகனுக்கு தகவல் அளித்தார். அதிர்ச்சியடைந்த மகன், தந்தை திட்டியதோடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் இளம்பெண் ஒருவர் குழந்தையை அழைத்து சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் தனிப்படை அமைத்து குழந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
யார் என்று தெரியாத இளம்பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்ததால் நிகழ்ந்த விபரீதத்தால் முதியவரும் அவரது மகனும் பரிதவித்து வருகின்றனர்.
Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!