11 வயது மகளை காமப்பசிக்கு இரையாக்க துடித்த தந்தை..! அதிர்ந்துபோன தாய்..!

By Manikandan S R S  |  First Published Jan 26, 2020, 1:23 PM IST

 சிறுமி பானுவிற்கு அவரது தந்தை பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.


சேலம் மாவட்டம் அயோத்தியபட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 11 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் சேலத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தந்தை கல்லூரி உடற்கல்லூரி இயக்குனராக இருக்கிறார். இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள் ஆவர்.

Tap to resize

Latest Videos

பானுவிற்கு 13 வயதில் சகோதரி ஒருவர் இருக்கிறார். அவர் ராசிபுரத்தில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறார். பானு அயோத்தியபட்டணத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இந்தநிலையில் சிறுமி பானுவிற்கு அவரது தந்தை பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் தொடக்கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார். இதனால் பயந்து போன சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார்.

இதனிடையே ஒருநாள் பானுவின் தாயின் கண்முன்னே இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த பானுவின் தாய், உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தார். சைல்டு லைன் உதவியுடன் பானு சார்பாக சேலம் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்படி வழக்குபதியப்பட்டு விசாரணைக்காக உடற்கல்வி இயக்குனர் அழைக்கப்பட்டார். ஆனால் புகார் கொடுத்தது தெரிய வந்ததும் அவர் தலைமறைவாகி இருக்கிறார். இதையடுத்து போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Also Read: குடிபோதையில் இளம்பெண்ணுடன் உல்லாசம்..! பேத்தியை தொலைத்து பரிதவிக்கும் முதியவர்..!

click me!