கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் எலந்தூர் கிராமத்தில் அண்மையில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள காவல்துறையின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரோஸ்லின் பத்தனம்திட்டாவில் உள்ள தம்பதியரின் வீட்டிற்கு படத்தில் நடிக்க வரவழைக்கப்பட்டு ரூ.10 லட்சம் தருவதாகக் கூறப்பட்டது. அவள் வீட்டை அடைந்ததும், அது படப்பிடிப்பின் ஒரு பகுதி என்று கூறி, அவரது கைகளையும் கால்களையும் தம்பதியினர் கட்டிவிட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லைலா என்பவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் தலையை உடைத்து. அவளது அந்தரங்க உறுப்புகளில் கத்தியைச் செருகினார். பிறகு அப்பெண்ணின் கழுத்தை அறுத்து கொன்றார். இரண்டாவது குற்றவாளியான பகவல், பாதிக்கப்பட்ட பெண்ணின் மார்பகங்களை அறுத்து, சடங்கின் ஒரு பகுதியாக அதனை பாதுகாப்பாக வைத்திருந்தார்.
இதையும் படிங்க..தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் மெட்டா.. ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியூட்டும் பின்னணி காரணம்
பிறகு அந்த பெண்ணை வீட்டிற்குள் இழுத்துச் சென்ற முகமது ஷபி உட்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும், பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டின் அருகே உள்ள குழிகளில் புதைத்தனர். இரண்டாவது பாதிக்கப்பட்ட பத்மா செப்டம்பர் 26 அன்று காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, அதே நாளில் பத்மாவை காரில் அழைத்துச் சென்றது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது.
ஷாஃபியால் தம்பதியரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், படத்தில் நடிக்க ரூ.15,000 கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். வீட்டிற்கு வந்த பத்மா பணம் கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் அவளை கழுத்தில் பிளாஸ்டிக் கயிற்றைப் பயன்படுத்தி நெறித்துள்ளார். பின்னர் ஷாபி பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் கத்தியை செலுத்தி கழுத்தை அறுத்துள்ளார் என்று போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..சொத்து குவிப்பு வழக்கில் சிக்கும் திமுக எம்.பி ஆ.ராசா.. சிபிஐ எடுத்த அதிரடி முடிவு - அதிர்ச்சியில் திமுக
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் சேர்ந்து அவரது உடலை 56 துண்டுகளாக வெட்டி குழிகளில் புதைத்தனர். தோண்டியெடுக்கப்பட்ட உடல் உறுப்புகளில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொலையை அறிவியல் முறையில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட பகவல், லைலா மற்றும் ஷபி ஆகிய மூவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது. இரண்டு பெண்களை நரபலி செய்திருப்பது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..Alien : டிசம்பர் 8.! பெரிய விண்கல்லில் ஏலியன்கள் பூமிக்கு வரும்.. கணித்து சொன்ன டைம் ட்ராவலர் - சாத்தியமா ?