ரவுடிகளை ரவுண்ட் கட்டும் தமிழக போலீஸ்.. புதுச்சேரியில் பதுங்கலா? சல்லடை போட்டு தீவிர தேடுதல் வேட்டை..!

By vinoth kumarFirst Published Oct 12, 2022, 1:15 PM IST
Highlights

தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள ரவுடிகள் அண்டை மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தமிழக போலீசார் சந்தேகித்து வரும் நிலையில் இதுதொடர்பாக தமிழகத்தையொட்டிய பக்கத்து மாநிலங்களுக்கு போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். 

புதுச்சேரிக்குள் தமிழக ரவுடிகள் ஊடுருவி உள்ளார்களா? என்பது குறித்து பேருந்து நிலையம் அருகே உள்ள விடுதிகளில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அங்குள்ள ரவுடிகள் அண்டை மாநிலங்களில் தலைமறைவாக இருப்பதாக தமிழக போலீசார் சந்தேகித்து வரும் நிலையில் இதுதொடர்பாக தமிழகத்தையொட்டிய பக்கத்து மாநிலங்களுக்கு போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரவுடிகள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் புகுந்திருப்பதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- காவல் நிலையங்களில் அறிமுகமான “GREAT” திட்டம்; இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது

மேலும் புதுவையில் சமீப காலமாக செயின் பறிப்பு, வாகன திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. இந்த குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் முழுமையாக போலீசாருக்கு கிடைக்கவில்லை, தமிழக போலீசாரின் எச்சரிக்கையை தொடர்ந்து புதுச்சேரி போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக பகுதியை சேர்ந்த ரவுடிகளுக்கு புதுவை ரவுடிகள் யாரேனும் அடைக்கலம் கொடுத்துள்ளார்களா? என்பது தொடர்பாகவும் ரகசிய விசாரணையிலும் இறங்கியுள்ளனர், இதனால் புதுவையில் உள்ள தங்கும் விடுதிகளில் சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கியுள்ளார்களா? என்பது தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமையில் கிழக்கு பகுதி காவல் கண்காணிப்பாளர் வம்சித ரெட்டி, உருளையன்பேட்டை ஆய்வாளர் பாபுஜி மற்றும் போலீசார் இரவு புதுச்சேரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள பதிவேட்டை பார்வையிட்டு யார் யார் தங்கியுள்ளனர் என்று விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள அறைகளுக்கு சென்று தங்கி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் அடையாள அட்டை மற்றும் ஆவணங்களை சோதனை செய்தனர். 

இதையும் படிங்க;- திருச்சியில் 48 மணி நேரத்தில் 82 ரவுடிகள் கைது; சிங்கம் பட பாணியில் போலீஸ் அதிரடி வேட்டை

click me!