நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி கூறியதின் அடிப்படையில் இருவரின் சடலங்களையும் வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர்.
கேரளாவில் நரபலி
செல்வம் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லின், பத்மா ஆகிய இரு பெண்களும் லாட்டரி விற்று தொழில் செய்து வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக இரண்டு பெண்களையும் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரண்டு பெண்களின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, இருவரின் செல்போன்களும் கடைசி சிக்னலாக பதனம்திட்டா அருகே திருவல்லா என்ற பகுதியை காட்டியுள்ளது. மேலும் இரண்டு செல்போன் எண்ணிற்கும் எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி மந்திரவாதி தான் கடைசியாக பேசியது தெரியவந்தது.
பெண்களை துண்டு துண்டாக வெட்டி கொடூரம்
இதனையடுத்து ஷபியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர்அப்போது பரபரப்பான தகவலை ஷாபி தெரிவித்ததை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போலி மந்திரவாதி ஷாபி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள வைத்தியர் பகவல் சிங்கை தொடர்புகொண்டுள்ளார். உடல் நலம் நன்றாக இருக்கவும், செல்வம் செழிக்கவும் ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று வீடு அமைந்துள்ள இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்தால் எல்லாம் சரியாகி விடும் என்றும் செல்வம் கொட்டும் என கூறியுள்ளார். மேலும் நரபலிக்கு தேவையான பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷபி கூறியுள்ளார்.
வயிற்று வலிக்கு ஸ்கேன் எடுக்க போன பெண்.. ரிப்போர்ட் பார்த்த டாக்டருக்கு அதிர்ச்சி - அச்சச்சோ.!
உடலை சமைத்து சாப்பிட்ட கொடூரம்
அப்போது லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டு வந்த ரோஸ்லின் என்ற பெண்ணிடம் 10 லட்சம் கொடுப்பதாக கூறி அழைத்து சென்று ஷாபி மற்றும் மருத்துவர் முதலில் நரபலி கொடுத்துள்ளனர். இதற்க்கு உரிய பலன் கிடைக்காத காரணத்தால் தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பத்மாவையும் நரபலி கொடுத்துள்ளனர். இந்த இரண்டு பேரையும் வெவ்வேறு நாட்களில் சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி முகமது ஷாஃபி, மற்றும் டாக்டர் தம்பதி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அங்கு சினிமா ஷூட்டிங் நடைபெறுவதாக கூறி அவர்களை ஆடைகள் இல்லாமல் கட்டிலில் கட்டி வைத்து கழுத்தை அறுத்தும் கொலை செய்துள்ளார். இதனையடுத்து நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி கூறியதின் அடிப்படையில் இருவரின் சடலங்களையும் வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மீதமுள்ள துண்டுகளை வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்துள்ளனர். பணத்திற்காக இரண்டு பெண்கள் நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்களின் உடல் பாகங்களை டிஎன்ஏ சோதனைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்