ஜம்முவில் பிரதமர் மோடி... லாலியன் கிராமத்தில் திடீர் குண்டுவெடிப்பு? பரபரக்கும் விசாரணை..!

By Kevin KaarkiFirst Published Apr 24, 2022, 11:35 AM IST
Highlights

ஜம்முவை அடுத்த பிஷ்னா எனும் பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் இன்று பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாடு முழுக்க இதற்கென விசேஷ நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பலர் இதில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்து பகுதியிலும் இன்று பஞ்சாயத்து ராஜ் கொண்டாட்ட நிகழ்வு நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்துகிறார். இதற்காக, பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீர் சென்று இருக்கிர். இந்த நிலையில், ஜம்முவை அடுத்த பிஷ்னா எனும் பகுதியில் உள்ள லாலியன் கிராமத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தாக்குதல்:

மேலும் லாலியன் கிராமத்தின் திறந்தவெளி விவசாய நிலத்தில் வெடிகுண்டு வெடித்ததாக தகவல் வெளியாகி இருக்கிற. இதுகுறித்த தகவலை கிராமவாசிகள் சிலர் போலீசாரிடம் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கிடையே, சம்பாவில் உள்ள பள்ளி கிராமத்தில் பிரதமர் மோடி உரையாற்றும் இடத்தில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில், வெடிகுண்டு வெடித்து இருப்பதாக வெளியான தகவலை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணை:

இதுபற்றி மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், லாலியன் கிராமத்தில் ஏற்பட்டு இருக்கும் பள்ளம் மின்னல் அல்லது விண்கல் விழுந்து ஏர்பட்டு இருக்கலாம். இந்த சம்பம் தீவிரவாத தாக்குதலாக இருக்க முடியாது என ஜம்மு மூத்த எஸ்.ஐ. சந்தன் கோலி தெரிவித்து இருக்கிறார். 

முன்னதாக வெள்ளி கிழமை அன்று சுஞ்வான் பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த தீவிரவாத தாக்குதலில் ஒரு பாதுகாப்பு அதிகாரி கொல்லப்பட்டார். 

நிகழ்ச்சி:

இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்ட இருக்கிறார். 

click me!