போலீசாக நடித்து நகைக் கடை உரிமையாளரை கடத்த முயன்ற கும்பல்... வழியில் நிஜ போலீஸ்... என்ன ஆச்சு தெரியுமா?

By Kevin KaarkiFirst Published Apr 24, 2022, 11:04 AM IST
Highlights

முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து போலீசார் ஆரோன் உள்பட நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். 

போலீசாக நடித்து நகைக் கடை உரிமையாளரை கடத்திய ஏழு பேர் கும்பல் பற்றி புழல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

சென்னை முகப்பேரை அடுத்த ராபின் ஆரோன் நகைக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். சமீபத்தில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் புதிய நகைக் கடையை திறந்தார். கடை திறப்பு விழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, ஆந்திரா பிரதேச மாநிலத்தில் இருந்து ஆடம்பர காரில் சென்னை திரும்பி கொண்டிருந்தார். வழியில் புழல் காவல் நிலையம் அருகே ஜி.என்.டி. சாலையில் ஏழு பேர் கும்பல் மோட்டார்சைக்கிளில் வந்து ராபின் ஆரோன் காரை வழிமறித்தனர். 

வழிமறித்த கும்பல்:

பின் அவர்கள் கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் இருந்து வருவதாகவும், ஆரோனை கைது செய்ய தங்களிடம் வாரண்ட் இருப்பதாகவும் கூறினர். இதை அடுத்து ஆரோனை ஒருவர் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார். பின் கும்பலை சேர்ந்த மற்றொரு நபர் ஆரோன் ஓட்டி வந்த காரை ஸ்டார்ட் செய்ய முயன்றார். எனினும், கார் ஸ்டார்ட் ஆக ஆரோனினை கேரைகை வைக்க வேண்டும் என்ற கட்டத்தில், ஆரோனை அவர்கள் திரும்பி அழைத்து வந்தனர். 

வரும் வழியில் இவர்களை போக்குவரத்து போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். விசாரணையில், இவர்கள் முரணான தகவல்களை தெரிவித்ததை அடுத்து போலீசார் ஆரோன் உள்பட நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். காவல் நிலையம் செல்லும் வழியில் மற்ற மூவர் பாதி வழியில் இறங்கி தாங்கள் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையம் வருவதாக கூறி சென்றுள்ளனர். 

தேடுதல் வேட்டை:

ஆனால் ராபின் ஆரோன் தவிர மற்ற யாரும் காவல் நிலையம் வரவே இல்லை. பின் கொருக்குப் பேட்டை காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு இது பற்றி விசாரணை செய்தனர். அப்போது தான், ஆரோனை கைது செய்ய வந்தவர்கள் கொருக்குப் பேட்டை காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் இல்லை என தெரியவந்துள்ளது. 

இதை அடுத்து ஆரோன் கொடுத்த புகாரின் பேரில், போலீசாக நடித்து நகைக் கடை உரிமையாளரை கடத்த முயன்ற நபர்களை தேடும் பணியினை புழல் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். 

click me!