கல்லூரி மாணவியுடன் பாஜக பிரமுகர் நிர்வாண வீடியோ கால்.. அட்டூழியம்.. காப்பாற்றுங்க சார் என கதறும் மாணவிகள்.

Published : Jun 11, 2022, 06:38 PM ISTUpdated : Jun 11, 2022, 06:45 PM IST
கல்லூரி மாணவியுடன் பாஜக பிரமுகர் நிர்வாண வீடியோ கால்.. அட்டூழியம்.. காப்பாற்றுங்க சார் என கதறும் மாணவிகள்.

சுருக்கம்

தனது கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவியுடன்  நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தனது கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவியுடன்  நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய விவகாரத்தில் பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை மேற்கோள்காட்டி இதே வேலையாக திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது.? இத்தகைய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பு நடத்தும் காவி கொடூரர்களை என்ன செய்வது என திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா டுவிட் செய்துள்ளார்.இது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு கல்லூரி என்ற பெயரில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் 300 க்கும் அதிகமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் சேர்மேன் முன்னாள் பாஜக சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் ஆவார்.

இவர் தனது கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் கல்லூரியின் தாளாளர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி அவரிகளிடம் அருவருக்கதக்க வகையில் மிகத் தவறாக நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அங்கே பயிலும் ஒரு மாணவியுடன் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பாக தாஸ்வின் அந்த மாணவியின் உடலில் ஒட்டுத் துணியில்லாமல் நிர்வாணமாக நிற்கச் சொல்லி வீடியோ காலில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் அந்த வீடியோ கல்லூரி மாணவர்களிடையே திடீரென பரவியது, இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் அந்த கல்லூரியில் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி கல்லூரிக்குள் செல்ல மறுத்து நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களை சமரசம்  செய்ய முயன்றனர், அப்போது மாணவிகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாணவிகள் அங்கு நடந்தவற்றை குறித்து புகார் கொடுத்தனர். அந்த புகாரில், கல்லூரி சேர்மன் தாஸ்வின் கல்லூரி படிக்கும் மாணவிகளின் ஏழ்மை நிலையை பயன்படுத்தி அவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தார். இந்த சம்பவத்திற்கு உள்ளாகியிருக்கும் மாணவி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதை தெரிந்து கொண்டு அந்த மாணவியை தனியாக அழைத்து செ*** டார்ச்சர் கொடுத்து வந்திருக்கிறார் ஜாஸ்வின், ஒருகட்டத்தில் அந்த மாணவியை ஒட்டுத்துணியில்லாமல் நிர்வாணமாக அழைத்து வீடியோ காலில் பேச வைத்துள்ளார். மேலும் அந்த மாணவியிடம் சக மாணவிகள் குறித்து கேட்டறிந்து அவர்களிடம் அதேபோல் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதை நிரூபிக்க எங்களிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. தயவுசெய்து எங்களை காப்பாற்றுங்கள் சார்... தவறு நடந்த பிறகு காப்பதை விட தவறு நடப்பதற்கு முன்பே எங்களை காப்பாற்றுங்கள், டாஸ்வினுக்கு கிடைக்கும் தண்டனை அந்தப் பெண்ணுக்கு கிடைத்த நீதி. எல்லோருக்கும் இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். கல்லூரி மூடிவிட்டால் எங்கள் படிப்பு வீணாகி விடும். உடன்படிக்கும் பெண்ணுக்கு பாலியல் கொடுமை நடந்தது எங்களுக்கு அச்சமாக உள்ளது.

 

படிப்பை நிறுத்தாமல் வேறொரு கல்லூரியில் படிக்க அரசு உதவ வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த செய்தியை டேக் செய்துள்ள திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, " இதே வேலையாக திரியும் இந்த மிருகங்களை என்ன செய்வது.? இத்தகைய மிருகங்களை மட்டுமே வைத்து பிழைப்பை நடத்தும் காவிக் கொடூரர்களை என்ன செய்வது"  என ஆதங்கம் தெரிவித்துள்ளார். அவரின் டுவிட்டர் வைரலாகி வருகிறது. 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!