மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வந்தவர் சனா கான். கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன பாஜக பெண் தலைவர் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வந்தவர் சனா கான். கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனைவியை கணவரே கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனா கானுக்கும் அமித்துக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சனா கான் தனது கணவரை பார்ப்பதற்காக மத்தியபிரதேச மாநிலம் ஜபல்புர் சென்றுள்ளார். அப்போது பணம் தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஜபால்புரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்ற அமித், சனா கானை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்துள்ளார். மேலும், உடலை ஹரின் ஆற்றில் தூக்கி வீசியுள்ளார். நாக்பூர் மற்றும் ஜபால்புர் போலீசார் இணைந்து, விசாரணை மேற்கொண்டு கணவரை அமித்தை கைது செய்துள்ளனர்.