
திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவர் கலிகண்ணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமியின் மகன் கலிகண்ணன். இவர் திருப்பத்தூர் நகர பாஜக துணை தலைவராக இருந்து வருகிறார். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி என்ற இடத்தில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கொடூரமாக மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்.
இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த போது பெவிகுவிக்கை ஊற்றிய சாமியார்! ஆணின் மர்ம உறுப்பு துண்டிப்பு! பெண்ணின் உறுப்பிலும் வெட்டு
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கலிகண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கடந்த ஒரு மாதமாக தன்னுடைய வீட்டிற்கு செல்லாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மர்ம நபர்களால் கலிகண்ணன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். பாஜக பிரமுகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- பெட்ரோல் குண்டுகள் வீசி.. ஊராட்சி மன்ற தலைவர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்! போலீஸ் குவிப்பு..!