முக்கிய ரோலில் பெங்களூரு பியூட்டிஷியன்..! குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

By ezhil mozhiFirst Published May 19, 2019, 4:47 PM IST
Highlights

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் புதியதாக பெங்களூருவை சேர்ந்த பியூட்டிஷியன் ஒருவர் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
முக்கிய ரோலில் பெங்களூரு பியூட்டிஷியன்..! குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் ஒரு அதிர்ச்சி தகவல்..!

ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை வழக்கில் புதியதாக பெங்களூருவை சேர்ந்த பியூட்டிஷியன் ஒருவர் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் குழந்தைகள் விற்பனை செய்வது தொடர்பாக செவிலியர், உதவியாளர் அமுதவள்ளி அவரது கணவர் ரவிச்சந்திரன் அதேபோன்று தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த ஒரு நபர் என மொத்தம் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையில் இதுவரை 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்கப்பட்டு உள்ளதாகவும், யார் யாருக்கு அந்த குழந்தைகள் விற்கப்பட்டது? குழந்தையின் பெற்றோர்கள் யார்? என பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் குழந்தை விற்பனையில் இடை தரகராக செயல்பட்ட அருள்சாமி, அசினா இவர்களின் வாக்குமூலத்தின்படி பெங்களூருவை சேர்ந்த 40 வயதான பியூட்டிஷியன் ரேகா என்பவருக்கும் தொடர்பு உண்டு என தெரியவந்துள்ளது. பின்னர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரேகா, இடைதரகர் அருள்சாமி மூலம் கொல்லிமலையில் பிறந்த இரண்டு குழந்தைகளை விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவரை கைது செய்த போலீசார் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். பின்னர் வரும் 31ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தத்தில் குழந்தை விற்பனை தொடர்பாக இதுவரை ரேகாவுடன் சேர்த்து 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

click me!