உங்களுக்கு சரக்கடிக்கிறதுக்கு இடமே கிடைக்கலையா? கண்டித்த பேக்கரி உரிமையாளர் படுகொலை! மனைவி கண்முன்னே பயங்கரம்!

Published : Nov 14, 2023, 11:16 AM ISTUpdated : Nov 14, 2023, 11:18 AM IST
உங்களுக்கு சரக்கடிக்கிறதுக்கு இடமே கிடைக்கலையா? கண்டித்த பேக்கரி உரிமையாளர் படுகொலை! மனைவி கண்முன்னே பயங்கரம்!

சுருக்கம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். 

மது அருந்தியவர்களை தட்டிக்கேட்ட பேக்கரி உரிமையாளர் மனைவி கண்முன்னே 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர் பழைய பேருந்து நிலையம் எதிரே பேக்கரி கடை நடத்தி வருகிறார். தற்போது, இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், சிவக்குமார்  தனது இரண்டாவது மனைவி காளீஸ்வரி (23) மகன் குருசரன்(4) ஆகிய மூன்று பேரும் தீபாவளி விடுமுறைக்காக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். நேற்று முந்தினம் மாலை தெற்குவெங்காநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் உள்ள தனது சொந்த நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது சிவக்குமாரின் இடத்துக்கு அருகே 4  பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை சிவக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- அழகுக்கு ஏத்த மாதிரி ரேட்டு! மசாஜ் சென்டர் மஜாவாக நடந்த விபச்சாரம்.. தட்டித்தூக்கிய போலீஸ்.!

இதனால், ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சிவக்குமாரை மனைவி கண்முன்னே அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிவக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த கொலை தொடர்பாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது அருந்தியதை தட்டி கேட்டதற்காக ஆத்திரமடைந்த கும்பல் குடிபோதையில் வெட்டி கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!