மாட்டிக்காதீங்க! போலி இணையதளங்களைத் தொடங்கி தகவல்களைத் திருடி விற்கும் கேடி கும்பல்!

By SG Balan  |  First Published Nov 12, 2023, 1:41 AM IST

 இணையதளங்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 வாடிக்கையாளர்களின் தரவுகளை சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு விற்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.


இல்லாத கூரியர் நிறுவனத்தின் பெயரில் இணையதளம் தொடங்கி ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றிய கும்பல் பிடிபட்டிருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல போலி இணையதளங்களை உருவாக்கி, சைபர் குற்றவாளிகளுக்கு தரவுகளை விற்றுள்ளனர் என போலீசார் கூறுகின்றனர்.

இதுமட்டுமின்றி இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் டிஎம்டி கம்பிகளை உலக நாடுகளுக்குக் கொண்டுசேர்க்கும் விநியோகஸ்தர்களாக காட்டிக்கொண்டு, போலியான கூகுள் விளம்பரங்களை உருவாக்கி, ஏமாற்று வேலையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் டெல்லியில் உள்ள சுமார் 100 தொழிலதிபர்களை ஏமாற்றியுள்ளனர்.

Tap to resize

Latest Videos

வாட்ஸ்அப்பில் பழைய மெசேஜை தேடிப் பிடிக்க புதிய சர்ச் ஆப்ஷன் அறிமுகம்!

பீகாரில் உள்ள நாளந்தாவில் இருந்தும் மற்றொரு முக்கியக் குற்றவாளியான சவுரவ் குமார் (28) என்பவரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். ஒரு லேப்டாப், ஐந்து ஸ்மார்ட்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர் பிரபல கூரியர் நிறுவனங்களின்  பெயரில் போலி இணையதளங்களை உருவாக்கி மோசடி செய்துள்ளார். அந்த இணையதளங்கள் மூலம் ஒரு நாளைக்கு சுமார் 300 வாடிக்கையாளர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்கள் உள்ளிட்ட தரவுகளை சேகரித்து சைபர் குற்றவாளிகளுக்கு விற்றதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

இது தொடர்பாக அக்டோபர் 18ஆம் தேதி டெல்லியில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 35 வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர் கூரியர் டெலிவரி தொடர்பாக தனக்கு போன் செய்து ஏமாற்றியதாக புகார் அளித்தார். அவருக்கு லிங்க் அனுப்பப்பட்டதாகவும் அதைக் கிளிக் செய்தவுடன், அவருடைய மொபைல் ஹேக் செய்யப்பட்டு UPI மூலம் அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.97,970 திருடப்பட்டது என புகாரில் கூறியிருந்தார்.

பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மற்றும் நவாடா ஆகிய இடங்களில் இருந்து இந்த இணையதளங்கள் இயக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப விசாரணையில் தெரியவந்தது. ஐந்து நாட்கள் தொடர் சோதனைக்குப் பிறகு, சவுரவ் குமார் கைது செய்யப்பட்டார். டிஎம்டி கம்பி விநியோகஸ்தர்களாக நாடகமாடிது தொடர்பாக தீபக் குமார் (28), ஜிதேந்திர குமார் (32) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாட்னாவின் புறநகரில் உள்ள ஒரு இடத்தில் இருந்து ஒரு குழுவாக செயல்பட்டு வந்துள்ளனர். இரும்பு கம்பிகள் மற்றும் டிஎம்டி பார்களை குறைந்த விலையில் விற்பதாகக் கூறி, ஏமாற்றியுள்ளனர். இவர்கள் இருவரிடம் இருந்தும் 15 செல்போன்கள், 25 சிம்கார்டுகள், 20 ஏடிஎம் கார்டுகள், 7 காசோலை மற்றும் பாஸ்புக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

எங்கேயும் எப்போதும் இன்டர்நெட் இல்லாமலே கூகுள் டிரைவ் ஸ்டோரேஜை பயன்படுத்தலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க!

click me!