கல்யாணம் ஆன டீச்சருக்கு இது தேவையா...? இளைஞனை விரட்டி விரட்டி காதலித்து டார்ச்சர்... கடைசியில் நடந்த கொடூரம்.

Published : Jul 04, 2022, 12:57 PM IST
 கல்யாணம் ஆன டீச்சருக்கு இது தேவையா...? இளைஞனை விரட்டி விரட்டி காதலித்து டார்ச்சர்... கடைசியில் நடந்த கொடூரம்.

சுருக்கம்

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியையின் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு பள்ளி ஆசிரியை வற்புறுத்தி வந்ததால் அந்த இளைஞன் ஆசிரியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆசிரியையின் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து தன்னை காதலிக்குமாறு பள்ளி ஆசிரியை வற்புறுத்தி வந்ததால் அந்த இளைஞன் ஆசிரியை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்துள்ளது. பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறுகிறது.

திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் தவறான பாதையில் செல்வது பரவலாக அதிகரித்துள்ளது. சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் கூட தவறான உறவில் ஈடுபட்டு கொலை தற்கொலைக்கு ஆளாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நடந்துள்ளது. இதன் முழு விவரம் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: என்னைக்குமே நாங்க இறை நம்பிக்கையில் தலையிட மாட்டோம்.. பாஜகவை ஜர்க் ஆக்கிய முதல்வர் ஸ்டாலின்.!

அயோத்தியில் உள்ள ஸ்ரீராமபுரம் காலனியைச் சேர்ந்தவர் சுப்ரியா, பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள், குடும்பம் உள்ளது.ஆனால் ஆசிரியை தன்னைவிட வயதில் சிறிய இளைஞருடன் திருமணத்துக்கு புறம்பான உறவில் ஈடுபட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த இளைஞருடன் ஆசிரியரின் கள்ளக்காதல் தொடர்ந்தது.

இதையும் படியுங்கள்: மச்சினிச்சியை மடக்கிய அக்கா புருஷன்.. லாட்ஜில் ரூம் போட்டு செய்த பகீர் சம்பவம்.. அதிர்ந்துபோன ஊழியர்.!

இந்நிலையில் தனது கள்ளக்காதல் விவகாரம் ஊரில் உள்ளவர்களுக்கு தெரிந்துவிடும் என அஞ்சிய அந்த இளைஞர் ஆசிரியரிடம் இருந்து விலகத் தொடங்கினார். ஆனால் ஆசிரியையார் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, தன்னுடனான காதலை தொடர வேண்டும் என அந்த இளைஞரை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அந்த இளைஞன் எவ்வளவு சொல்லியும் ஆசிரியை கேட்கவில்லை.

இதனால் ஆசிரியை தீர்த்துக்கட்ட அந்த இளைஞன் முடிவு செய்தார், இந்நிலையில் ஜூலை 1ஆம் தேதி கோட்வாலி அயோத்தியில் உள்ள  ஸ்ரீராம் புறாவில் ஆசிரியர் வீட்டிற்கு வந்த அந்த இளைஞ்சம் சமயம் பார்த்து காத்திருந்தார், அப்போது ஆசிரியையின் கணவரும் தாயும் வெளியில் புறப்பட்டு சென்றனர், அப்போது வீட்டுக்குள் புகுந்த அந்த இளைஞன் மிகக்கொடூரமான ஆயுதத்தால் ஆசிரியையை சரமாரியாக  வெட்டினார். இதில் ஆசிரியை ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆசிரியையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த இளைஞன் அங்கிருந்து மாயமானார்.

அதேபோல் பீரோவில் இருந்து 50 ஆயிரம் பணம் மற்றும் ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அந்ந இளைஞன் பறித்துச் சென்றார், இந்தக் கொலை கொள்ளையை மையமாக வைத்து நடந்ததைப் போல சித்தரிப்பதற்காக அந்த இளைஞர் இப்படி நடந்து கொண்டார். இதடையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கொலை செய்த இளைஞனை கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆசிரியை தன்னை தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வந்ததால் கொலை செய்ததாக அவர் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த இளைஞனை மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.   
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!