போலி ஆதார் கார்டு அச்சடித்த பிடெக் பட்டதாரி..! அடகு கடை உரிமையாளர்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி

By Ajmal KhanFirst Published Jul 4, 2022, 10:11 AM IST
Highlights

போலியான வங்கி ரசீது, ஆதார் கார்டு தயாரித்து நகை அடகு கடைகாரர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த பி.டெக் பட்டதாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பேராசை பெருநஷ்டம்

பேராசை பெருநஷ்டம் என்பார்கள், ஒருவனை ஏமாற்ற வேண்டும் என்றால் அவனது ஆசையை தூண்ட வேண்டும் அப்படித்தான் தினமும் பல்வேறு இடங்களில் மோசடி நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் பேராசைக்கு ஆசைப்பட்டு பல லட்சம் ரூபாயை அடகு கடை உரிமையாளர்கள் இழந்துள்ளனர். அரசு வங்கி, தனியார் நிதி நிறுவனங்களில் அடமானம் வைத்த நகையை மீட்க கடன் வழங்குவது அடகு கடைக்காரர்களின் வழக்கம். நம்பிக்கை அடிப்படையில் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இவ்வாறு கடன் வழங்குவார்கள். ஆனால் அதிக லாபத்துக்கு ஆசைப்பட்டு அடகு கடைக்காரர்கள் பலர் முன் பின் அறிமுகம் இல்லாத நபர்களுக்கு  லட்சக்கணக்கில் பணம் கொடுத்துவிட்டு ஏமாறப்பட்ட நிகழ்வு தற்போது வெளியே தெரியவந்துள்ளது. கோவையில் அடுத்தடுத்த  சில நாட்களில் அசோக் குமார் என்ற நபர் மூன்று வெவ்வேறு அடகு கடைக்காரர்களிடம்  3 லட்சம், ஒரு லட்சம், மூன்றரை லட்சம் ஏமாற்றியதாக போலீசாரிடம் புகார் வந்துள்ளது. 

Latest Videos

சார் நான் உங்க ஸ்டுடென்ட் என்ன விட்டுடுங்க.. ஓயாமல் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் நிலைமையை பார்த்தீங்களா?

போலி ஆவணம் கொடுத்து மோசடி

இது தொடர்பாக போலீசார் விசாரணையில் ஈடுபட்ட போது மர்ம நபர் ஒருவர்  வங்கியில் நகைகளை கடனுக்காக அடகு வைத்திருக்கின்றேன்,  நீங்கள் பணம் கொடுத்தால் எடுத்து வந்து உங்களிடம் அடகு வைப்பேன் என்று  கூறி அடகு கடை காரர்களிடம் பணம் வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.  நகை அடகு வைத்ததற்க்கான வங்கி ரசிதையும், இருப்பிட விலாசம், . ஆதார் உள்ளிட்டவற்றை அச்சு அசலாக தயார் செய்து அடகு கடை கார்ர்களிடம் கொடுத்து  நம்ப வைத்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் யாரும் சந்தேகிக்கும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது என்பதற்காக  நகையின் அன்றாட மதிப்பினை அறிந்து அதற்க்கு ஏற்றவாறு நகை அடகு ரசீதை போலியாகவும் தயார் செய்திருக்கின்றான். நகை அடகு கடைகளை மட்டுமே குறிவைத்து லட்சக்கணக்கில் நவீன வழிப்பறி நடத்தியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொள்ளையனை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்த நிலையில் தலைமறைவாக இருந்த மோசடி மன்னன் அசோக்கை போலீசார் கைது செய்தனர். 

மேம்பால பணியில் புதையல்.! பழங்காலத்து நகைகளை காட்டி ஓட்டல் உரிமையாளருக்கு விபூதி அடித்த வட மாநில கும்பல்

மோசடி மன்னன் கைது

இதனையடுத்து மோசடி நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது பெயர் அசோக்குமார், கோயமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் என்றும் பொய்யாக கூறி போலி ஆதார் அட்டை அடித்து நவீன வழிப்பறி ஈடுபட்டது தெரியவந்தது.  தீபன் என்பது உண்மையான பெயர் என்றும்  சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில்  பிடெக் பட்டதாரி என்பது விசாரணையில் தெரியவந்தது.  சிவகாசியில் பட்டாசு ஆலை நடத்தி தொழில் நட்டமான நிலையில் நவீன வழிப்பறியில் இறங்கியது போலிஸ் விசாரணையில் கூறியுள்ளார். அசோக்  மீது விருதுநகர் மாவட்டத்தில் இதேபோன்ற 5 மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் வேறு சில இடங்களிலும் இதேபோன்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

வரதட்சணை வேணுமா உனக்கு? மாப்பிள்ளைக்கு தர்ம அடி கொடுத்த பெண் வீட்டார் - அதிர்ச்சி சம்பவம்

click me!