11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொடூரம்... குற்றவாளிகளுக்கு தண்டனை விவரத்தை அறிவித்து நீதிமன்றம் அதிரடி..!

Published : Feb 03, 2020, 03:35 PM ISTUpdated : Feb 03, 2020, 03:38 PM IST
11 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொடூரம்... குற்றவாளிகளுக்கு தண்டனை விவரத்தை அறிவித்து நீதிமன்றம் அதிரடி..!

சுருக்கம்

இன்று 15 பேருக்குமான தண்டனை விபரத்தை நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். குற்றவாளிகளில் ரவிக்குமார் (லிப்ட் ஆபரேட்டர்), சுரேஷ் (பிளம்பர்), அபிஷேக் (காவலாளி), பழனி (காவலாளி) ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாறன், முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜசேகர் மற்றும் ஏரல் ப்ராஸ் என்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ரவிக்குமார், சுரேஷ், உள்ளிட்ட 4 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மஞ்சுளா பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். 

சென்னை அயனாவரத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி தொடர்ந்து பல நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பின் லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார், சுரேஷ், எரால்பிராஸ், அபிஷேக், சுகுமாரன், முருகேசன், பரமசிவம், ஜெய்கணேஷ், பாபு, பழனி, தீனதயாளன், ராஜா, சூர்யா, குணசேகரன், ஜெயராமன், உமாபதி ஆகிய 17 பேரை போலீசார் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.

இவர்கள் மீது போக்சோ சட்டம் மற்றும் பாலியல் பலாத்காரம், காயம் ஏற்படுத்துதல், கூட்டு பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டார். 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை 2019-ம் ஆண்டு ஜனவரி 11-ம் தேதி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. எனினும் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கப்படாததால் தொடர்ந்து கடந்த ஒன்றரை வருடமாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், 36 அரசு தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு, 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துவிட்டார். மீதமுள்ள 16 பேருக்கு எதிரான வழக்கில் தோட்டக்காரர் குணசேகரன் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து மீதமுள்ள 15 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று 15 பேருக்குமான தண்டனை விபரத்தை நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். குற்றவாளிகளில் ரவிக்குமார் (லிப்ட் ஆபரேட்டர்), சுரேஷ் (பிளம்பர்), அபிஷேக் (காவலாளி), பழனி (காவலாளி) ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், பரமசிவன், ஜெய்கணேஷ், சுகுமாறன், முருகேசன் உள்ளிட்ட 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ராஜசேகர் மற்றும் ஏரல் ப்ராஸ் என்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் சாகும் வரை நன்னடைத்தை விதிகளின் படி வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!