டீச்சரிடம் கதறியும் விட்டு வைக்காத ஆசிரியர்... வகுப்பறைக்குள் வைத்து மாணவியிடம் காமத்து பாடம் நடத்தி அத்துமீறல்...!

Published : Feb 03, 2020, 02:48 PM IST
டீச்சரிடம் கதறியும் விட்டு வைக்காத ஆசிரியர்... வகுப்பறைக்குள் வைத்து மாணவியிடம் காமத்து பாடம் நடத்தி அத்துமீறல்...!

சுருக்கம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (50). இவர் காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 7, 8-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியர் நடராஜன் பள்ளி நேரத்தில் வகுப்பறையில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

கோவையில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள எல்லப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (50). இவர் காட்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் 7, 8-ம் வகுப்புகளுக்கு அறிவியல் பாடம் நடத்தி வருகிறார். ஆசிரியர் நடராஜன் பள்ளி நேரத்தில் வகுப்பறையில் 7, 8-ம் வகுப்பு மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார்.

இந்நிலையில், ஆசிரியர் நடராஜன் கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 30-ம் தேதி வரை 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பாடம் கற்றுத் தருவதாக கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட 7-ம் வகுப்பு மாணவி பெண் ஆசிரியை ஒருவரிடம் இதுகுறித்து முறையிட்டார். அவரது அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்ட மாணவி பள்ளியில் இருந்த புகார் பெட்டியில் ஆசிரியர் நடராஜன் குறித்து புகார் மனு எழுதி போட்டார். ஆசிரியர் மீது மாணவி தெரிவித்த பாலியல் புகார் விசாரணைக்கு வந்தபோது மாணவியை மிரட்டி புகாரை வாபஸ் பெற வைத்தனர்.

ஆனாலும், ஆசிரியர் நடராஜன் தொடர்ந்து புகார் தெரிவித்த மாணவியிடம் பாலியல் தொல்லை செய்து வந்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் மாணவி ஆசிரியரின் அத்துமீறல் தொடர்பாக தனது பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவியின் தந்தை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியை போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்