மகளின் திருமண வரவேற்புக்கு புறப்பட்ட தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை...!

Published : May 13, 2019, 10:47 AM ISTUpdated : May 13, 2019, 10:53 AM IST
மகளின் திருமண வரவேற்புக்கு புறப்பட்ட தந்தை கொடூரமாக வெட்டிக்கொலை...!

சுருக்கம்

சென்னையில் மைனர் பெண்ணுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   

சென்னையில் மைனர் பெண்ணுக்கு நடைபெறவிருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அயனவாரம் திக்காகுளத்தை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன் (45). இவரின் மகள் தீபாராணியின் திருமணம் திருப்பதியில் கடந்த 10-ம் தேதி நடந்தது. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மீஞ்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேருந்தில் உறவினர்கள், நண்பர்களை அனுப்பிவிட்டு, ஜெபசீலன், அவர் மனைவி கிறிஸ்டிலா இருவரும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டனர். 

ஜெபசீலனை 2 இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்தனர். பின்னர் ஜெபசீலனை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாக்குதல் நடத்தியவர்களை அவரது மனைவி தடுக்க முயன்ற போது அவர் கை துண்டானது. மேலும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜெபசீலன் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற இருந்ததாகவும் அத்திருமணத்தை ஆட்டோ ஓட்டுநர் ஜெபசீலன் தடுத்து நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரத்தில் இருந்த வினோத், ஜெபசீலனின் மகளின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமது நண்பர்களுடன் இணைந்து அவரை கொலை செய்துள்ளது காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தப்பியோடிய வினோத் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

அடச்சீ.. இப்படி ஒரு தாயா? 31 வயது கள்ளக்காதலனுக்கு 18 வயது மகளை திருமணம் செய்து வைத்த கொடூரம்
பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி.. காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கணவன் கண்முன்னே அலறிய மனைவி..