வாக்குமூலம் வாங்கிய வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட வேண்டிய அவசியம் என்ன? கேள்வியெழுப்பும் மார்க்சிஸ்ட்

By sathish kFirst Published May 13, 2019, 9:57 AM IST
Highlights

மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்?  என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது மார்க்சிஸ்ட்.

மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆகாஷின் வாக்குமூலம் அளித்த வீடியோவை காவல் துறை வெளியிட்டது ஏன்?  என போன்ற பல்வேறு கேள்விகளை முன்வைத்துள்ளது மார்க்சிஸ்ட்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த கறிவேப்பிலங்குறிச்சியில் காதலிக்க மறுத்ததற்காக  திலகவதி என்ற கல்லூரி மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். காதலிக்க மறுத்ததற்காக அப்பாவிப் பெண்ணை கொலை செய்திருப்பது தெரிகிறது.  

ஆகாஷை கைது செய்து, காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட திலகவதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், கொலை செய்ததாக குற்றம்சாட்டப்படும் ஆகாஷ் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அப்பகுதியில் சாதி மோதல் பதற்றம் தொடந்துவருகிறது. இதுதொடர்பாக ஆகாஷ் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலம் வீடியோ சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வருகிறது.

இதுதொடர்பாக  நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “திலகவதி படுகொலை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டிலிருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், வெளியில் சென்றுவரும் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும்?  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டிருக்கின்றன என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், இவ்வழக்கில் ஆகாஷ் என்னும் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியதாக காவல் துறையே வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. ஒருவேளை அவர் கொலை செய்திருக்கலாம். போலீசார் அந்த இளைஞரிடம் வாக்குமூலம் வாங்கியும் இருக்கலாம். அதை நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்திருக்கனும். வாட்ஸ் அப்பில் வெளிப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? நாளைக்கே அந்த இளைஞர் கட்டாயத்தின் பேரில்தான் வாக்குமூலம் பெற்றதாகக் கூறினால் போலீசால் என்ன செய்யும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர்கள் இருவரும் விரும்பினார்கள் என்றும், மாணவியைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் தனது மகனுக்கு இல்லை என்றும் அந்த இளைஞரின் தந்தை புகார் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள், இப்படியான இரண்டு மாறுபட்ட கருத்துகள் வருவது பலத்த சந்தேகமாகவே உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மாணவி திலகவதியை யார் கொலை செய்திருந்தாலும், அவர்கள் எந்த சாதி, மதமாக இருந்தாலும் உண்மையான குற்றவாளியை கண்டுபிடித்து கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

click me!