
தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை சேர்வைக்காரன் தெருவைச் சேர்ந்த ஆடிட்டரான மகேஸ்வரன் என்பவர் மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டணக் குளியலறை, கழிவறையை ஒப்பந்தம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த கழிவறை ஒப்பந்தம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த அதிமுக பெண் பிரமுகர் ஒருவருக்கும் இவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஆடிட்டர் மகேஸ்வர் தனது வீட்டின் அருகிலேயே ஆடு, கோழி, மீன் பண்ணை வைத்துள்ளார். நேற்றிரவு வழக்கம் போல் , தனது பண்ணையில் தங்கியிருந்த போது, நான்கு பேர்க்கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளது.
பின்னர் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினர் விசாரணையில், ஆடிட்டர் மகேஷ்வரன் தனது பகுதியில் எந்த தவறு நடந்தாலும் அதனை எதிர்த்து கேள்வி கேட்டு வந்துள்ளார். ஆக்க்கிரமிப்புக்கு எதிராகவும் மக்கள் பிரச்சனைக்கு ஆதரவாகவும் முதல் ஆளாக நின்று குரல் கொடுத்து வந்துள்ளார். மேலும் அந்த பகுதி மக்கள் அனைவரும் அவரை சமூக ஆர்வலர் என்றே அழைத்து வந்துள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஆடிட்டரின் பண்ணைக்கு எதிராக இருந்த மாநகராட்சி கழிவறை மற்று குளியலறையை அதிமுக பெண் பிரமுகர் ஒருவர் தான் கடந்த 10 ஆண்டுகளாக ஒப்பந்த முறையில் குத்தகைக்கு எடுத்து, மாநகராட்சி குத்தகை பணத்தை கட்டாமல் முறைகேடு செய்துவந்ததாக கூறப்படுகிறது. இதனை ஆடிட்டர் மகேஸ்வரன் தட்டி கேட்டதோடு மட்டுமல்லாமல், இந்த முறை அந்த கழிவறை மற்றும் குளியலறை அவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். இதனால் ஆடிட்டருக்கும் அதிமுக பெண் பிரமுகருக்கும் இடையே முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அந்த அதிமுக பெண் பிரமுகர், கோவிலுக்கு குடமுழுக்கு என்று கூறி வசூல் வேட்டையில் ஈடுப்பட்டு முறைகேட்டில் செய்ததாகவும் கோவில் திருவிழா என்றும் மக்களிடம் பணம் வசூலித்ததாகவும் கூறப்படும் நிலையில் அதனை ஆடிட்டர் கடுமையாக எதிர்த்துள்ளார். மேலும் வசூல் செய்ய பணத்தை முறைப்படி கோவில் நிர்வாகத்திடம் கொடுக்கவில்லை என்றால் முறைகேட்டில் ஈடுப்பட்டதை போஸ்டர் அடித்து ஓட்டுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் உள்ள பகை மேலும் பெரிதாகியுள்ளது. அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, ஆக்கிரமிப்பு அகற்றியுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் தான் நான்கு பேர் கொண்ட கும்பல் ஆடிட்டர் மகேஷ்வரனை வெட்டிக் கொலை செய்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பெண் பிரமுகரின் மகன் இட்லி கார்த்தி உள்ளிட்ட நான்கு பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். தப்பைத் தட்டிக் கேட்ட சமூக ஆர்வலர் ஒருவருக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டிருப்பது பெரும் வருத்தத்துக்குரியது என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: இளைஞர்களிடம் லட்சம் முதல் கோடி வரை.. சுருட்டிய தாய்,மகள் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பரபரப்பு சம்பவம் !