
ஆனால் இதுபற்றி யாரிடம் அந்த சிறுமி சொல்லவில்லை. இதற்கிடையே கடந்த 2017-ம் ஆண்டில் சிறுமி கர்ப்பம் அடைந்ததால், அவருடைய குடும்பதினருக்கு தெரியவந்துள்ளது. இருப்பினும் ஆரம்பத்தில், அவரது தாயார் மற்றும் காவல்துறையினரால் கேட்டபோதும் குற்றவாளி யார் என்பதை அவள் வெளியிடவில்லை. இதையடுத்து குழந்தைகள் நல மையத்திற்கு (CWC) ஆலோசனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், அந்த சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதில் 'தான் அப்போது 7 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாகவும், தனது தாய் வீட்டில் இல்லாதபோது, கடந்த இரண்டு ஆண்டுகளாக, தனது தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தனது தந்தை, பாலியல் பலாத்காரம் குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், இல்லையெனில் இருவரையும் போலீசார் கைது செய்வார்கள் என மிரட்டியதையும் அந்த சிறுமி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தொழிலாளியை கைது செய்தனர். இந்த வழக்கு கேரளாவில் உள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி உதயகுமார், பெற்ற மகளை மிரட்டி பலமுறை பாலத்காரம் செய்த தொழிலாளிக்கு 106 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். மேலும் அவருக்கு மொத்தம் ரூ. 17 லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.