காதலியை நிர்வாணப் படமெடுத்து நண்பனுக்கு அனுப்பி வைத்த காதலன்... தோண்டத் தோண்ட குவியும் ஆபாச புகைப்படங்கள்..!

Published : Sep 14, 2019, 11:40 AM IST
காதலியை நிர்வாணப் படமெடுத்து நண்பனுக்கு அனுப்பி வைத்த காதலன்... தோண்டத் தோண்ட குவியும் ஆபாச புகைப்படங்கள்..!

சுருக்கம்

கல்லூரி பெண் ஊழியரை அவரது காதலர் நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கல்லூரி பெண் ஊழியரை அவரது காதலர் நிர்வாணப்படம் எடுத்து நண்பருக்கு அனுப்பி மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் அவர். நாமக்கல் மாவட்டத்தில் ஒரு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் சேலத்தில் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் குடியிருந்து வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். அப்போது இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர் அதை செல்போனில் படம் பிடித்துள்ளார். பின்னர் தனது நண்பரான டிரைவர் ஒருவருக்கு அனுப்பியிள்ளார். அந்த புகைப்படங்களை வைத்து டிரைவர் சம்பந்தப்பட்ட கல்லூரி பெண் ஊழியரை தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டியுள்ளார்.

இதுபற்றி அந்த கல்லூரி பெண் ஊழியர், தனது தந்தையுடன் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று புகார் தெரிவித்தார். இதனையடுத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரையும், அந்த டிரைவரையும் ஆத்தூர் போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த டிரைவரின் செல்போனை வாங்கி போலீசார் விசாரித்தனர். அந்த செல்போனில் மேலும் பல இளம்பெண்களின் நிர்வாண படங்கள் இருந்தது தெரியவந்தது.

பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் இருப்பது, உல்லாசமாக இருப்பது, குளிப்பது போன்ற படங்கள் அதில் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்கள் யார்? அந்த படங்களை எடுத்தது யார்? படங்களை எப்படி எடுத்தார்கள்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கு பின்னணியில் இருப்பது யார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். 

போலீஸ் விசாரணையில் செல்போனில் நிர்வாண படங்கள் இருக்கும் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளதால், பொள்ளாச்சி சம்பவம் போன்று ஆத்தூரில் நடைபெற்று இருக்குமோ? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்