சாதிமாறி திருமணம் செய்ததால் கொடூரம்.. இளம் பெண்ணை நடு ரோட்டில் தூக்கிப் போட்டு கர்ப்பத்தை கலைத்து அட்டூழியம்.

By Ezhilarasan BabuFirst Published Oct 18, 2022, 5:55 PM IST
Highlights

காதல் திருமணம்  செய்ததால் கிராமத்தினர் இளம்பெண்ணுக்கு 50,000 அபராதம் விதித்ததுடன், பணத்தை கட்டத் தவறியதால் அந்த பெண்ணை அடித்து உதைத்து கர்ப்பத்தை கலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது


 

காதல் திருமணம்  செய்ததால் கிராமத்தினர் இளம்பெண்ணுக்கு 50,000 அபராதம் விதித்ததுடன், பணத்தை கட்டத் தவறியதால் அந்த பெண்ணை அடித்து உதைத்து கர்ப்பத்தை கலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. 

எத்தனையோ கல்வியில், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாடு முன்னேறினாலும், இன்னும் நாட்டில் எத்தனையோ கிராமங்களில் சாதி கட்டுப்பாடுகள் சாதி கொடுமைகளில் மூழ்கி சமூகம் பின்தங்கி கிடக்கிறது. இந்த நவீன யுகத்திலும் சாதி மத கட்டுப்பாடுகளை வைத்து சக மனிதர்களை சக மனிதர்களே கொடுமைப்படுத்தும் அவலம் தொடர்கிறது. வரதட்சணையின் பெயரால் அட்டூழியங்கள் அரங்கேற்றப்படுகிறது, சில பெண்கள் தான் காதலித்த அவர்களை கூட திருமணம் செய்ய முடியாத நிலைமை தொடர்கிறது. 

இதையும் படியுங்கள்:   மிஸ்டு காலில் உருவான கள்ளக்காதல்! புருஷன், பசங்களை உதறி தள்ளிவிட்டு சென்ற பெண்ணின் நிலைமையை பார்த்தீங்களா.?

இந்த வரிசையில் மனதார நேசித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதற்காக இளம் பெண் ஒருவர் கிராம மக்களால் கொடுமைப் படுத்தப் பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. பொது இடத்தில் அந்தப் பெண்ணிடம் விலங்குகளைப் போல அவர்கள் நடந்து கொண்டுள்ளனர் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு மண்டலம் பழைய வீரா புரத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் முடிந்த கையோடு அவர் மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி ஆய்வாளரை ஏமாற்றிய மோசடி மன்னன்..! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

இந்நிலையில் மகள் லீலாவதியை சமீபத்தில் அவரது பெற்றோர்கள் வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் கடந்த 14ம் தேதி கணவருடன் சொந்த  கிராமத்திற்கு வந்தார் இதை அறிந்த ஊர் மக்கள் அங்கு வந்தனர், அவர்கள் வீட்டை முற்றுகையிட்டனர், ஒரு சில நிமிடங்களில் பஞ்சாயத்து கூடியது, லீலாவதியின் கணவர் ஸ்ரீஹரியிடம் கிராம வழக்கப்படி சாதி மாறி திருமணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பது வழக்கம் என்று விளக்கினார், கிராமத்தின் விதிமுறைகளை மீறி காதல் திருமணம் செய்த லீலாவதிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறினர், இந்நிலையில் லீலாவதியின் குடும்பத்தினர் அபராத தொகையை நீக்குமாறு கிராம மக்களிடம் கெஞ்சினர்.

ஆனால் அபராதத் தொகையை நீக்க முடியாது, ஆனால் இரண்டு நாட்கள் அவகாசம் வழங்குவதாக கூறினர், ஆனால் அவர்களால் உரிய நேரத்தில் பணம் கிடைக்க முடியவில்லை, இதனால் இன்னும் சில நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என கோரினர், இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் லீலாவதியை நடுத்தெருவில் இழுத்துப் போட்டு சரமாரியாக தாக்கினர், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார், இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு திருப்பதியில் உள்ள  ரூயா மருத்துவமனையில் அனுமதித்தனர். சரியான நேரத்தில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

ஆனால் கடுமையாக தாக்கப்பட்டதால் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இதுகுறித்து  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
 

click me!