ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம்பணம் கொடுத்தேன் என்று குற்றம் சாட்டுவது அடிப்படை ஆதாரம் அற்றது என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா விளக்கம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங்க் கடந்த ஜூலை மாதம் 5ம் தேதி அவரது வீட்டருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை தொடர்பாக தற்போது வரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரௌடி சம்போ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் வெளிநாடு தப்பி சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உருளை கிழங்கை இப்படி சாப்பிடுங்க கடைசி வரைக்கும் குண்டாகவே மாட்டீங்க
undefined
இதனிடையே மொட்டை கிருஷ்ணனுடன் செல்போனில் உரையாடியதா இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், மோனிஷாவின் வங்கி கணக்கில் இருந்து மொட்டை கிருஷ்ணனின் வங்கி கணக்கிற்கு ரூ.75 லட்சம் பணம் பரிமாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஒன்றரை ஆண்டுகளில் ஒரு அரைசதம் கூட இல்லை; பாபர் ஆஸமை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
இந்நிலையில், மோனிஷா தரப்பில் அவரது வழக்கறிஞர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதன்படி மோனிஷா, மொட்டை கிருஷ்ணனுக்கு ரூ.75 லட்சம் பணம் வழங்கியதாக கூறப்படும் தகவல் முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது. பொய்யான தகவல்களை யாரும் பரப்பக் கூடாது. இந்த தகவல் அனைத்து பகுதிகளில் இருந்தும் நீக்கம் செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.