திண்டுக்கல் மாவட்டத்தில் செல்லமாக வளர்க்கப்பட்ட நாயை நாய் என்று அழைத்த பக்கத்து வீட்டுக்காரரை நாயின் உரிமையாளர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிகொம்பு அருகே உலகம் பட்டியார் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 65). இவரது வீட்டிற்கு அருகே வசிப்பவர் ராணி. ராணி செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் அப்பகுதியில் வருபவர்களையும், செல்பவர்களையும் குறைப்பதும், துரத்துவதுமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ராணிக்கும், ராயப்பனுக்கும் விரோதமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் ராயப்பன் ஊர் பெரியவர்களிடம் ராணி வளர்க்கும் நாய் எனது பேரக்குழந்தைகளை கடிக்க வருவதாகவும், அந்த நாயை கட்டி வைத்து வளர்க்குமாறு கூறியதற்கு என்னிடம் சண்டைக்கு வருவதாகவும் முறையிட்டுள்ளார். ஊர் திருவிழா நிறைவு பெற்றதும் இது குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என ஊர் பெரியவர்கள் தெரிவித்துள்ளனர்.
undefined
தை அமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய திராவிட மாடல் ஆட்சியாளர்கள்
இந்நிலையில், ராயப்பன் நேற்று மாலை தனது பேரக்குழந்தைகளுடன் வந்துகொண்டிருந்தார். அப்போது, நாய் அருகில் வராமல் இருப்பதற்காக கையில் குச்சி எடுத்து வைத்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இதனை கேட்ட ராணியின் மகன்களான வின்சென்ட் மற்றும் டேனியல் நாங்கள் செல்லமாக வளர்க்கும் நாயை, நாய் என்று கூறுவாயா? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே இருவரும் சேர்ந்து ராயப்பனை கட்டையால் தாக்கி கீழே தள்ளியுள்ளனர். மேலும் சேவல் சண்டைக்கு பயன்படுத்தப்படும் கத்தியைக் கொண்டு டேனியல் ராயப்பனின் மார்பு பகுதியில் தாக்கியுள்ளார். இதில் ராயப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
10 ஆண்டு குடும்ப வாழ்க்கை ஆனால், திருமணம் செய்ய மறுக்கிறார்; மதபோதகர் மீது பெண் புகார்
இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் டேனியல், வின்சென்ட், ராணி ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நாயை, நாய் என்று அழைத்ததற்காக முதியவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.