காதலியுடன் நெருக்கமாக இருந்த காதலன்! தங்கை முறை உறவு.. இளைஞனின் ஆசையால் சீரழிந்த குடும்பம்

Published : Jan 20, 2023, 07:24 PM IST
காதலியுடன் நெருக்கமாக இருந்த காதலன்! தங்கை முறை உறவு.. இளைஞனின் ஆசையால் சீரழிந்த குடும்பம்

சுருக்கம்

தங்கை உறவுமுறை கொண்ட பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை அருகே போலுகாக கொல்லை மலைக்கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கிரீஷ்.  9 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர் ஈரோடு மாவட்டத்தில் ஒரு நூல் மில்லில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக பெட்டமுகிலாளம் கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

கிரீஷ் அதே கிராமத்தை சேர்ந்த தனது தந்தையின் அண்ணன் உறவு முறையான பசப்பா என்பவரது மகள் நாகம்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். நாகம்மா கிரீஷ்க்கு தங்கை உறவுமுறை ஆவார். இதனையறிந்த அவரது பெற்றோர் முறையில்லாத அவரது காதலை கண்டித்துள்ளனர். கிரீஷ் விடுமுறைக்கு வந்துள்ளதை அறிந்த நாகம்மா நேற்று கிரிஷின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

பிறகு நாகம்மா வீட்டில் இல்லாததால் அவரது தந்தை பசப்பா, அண்ணன் சிவகுமார் மற்றும் உறவினர்கள் ஆகியோர் அவரை தேடி கிரீஷ் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் ஒன்றாக இருப்பதை கண்ட பசப்பா மற்றும் அவரது உறவினர்கள் கிரீஷை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் பசப்பா தனது மகள் நாகம்மாவை அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

உறவினர்கள் தாக்கியதால் கோபித்து கொண்டு அங்கிருந்து சென்ற கிரீஷ் அருகிலுள்ள வீரபத்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க, இதற்கு சம்பந்தமான 6 பேரை கைது செய்துள்ளனர் காவல்துறை. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!