தமிழக எல்லையில் 3 மாநிலங்களை மிரட்டிய டீசல் கொள்ளையர்கள்… பொறி வைத்து பிடித்த சித்தூர் போலீஸ்!

By manimegalai aFirst Published Sep 28, 2021, 8:48 PM IST
Highlights

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல், பேர் இணைந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாலை நேரத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டு வந்தனார்.

மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 பேர் கொண்ட கும்பல், பேர் இணைந்து தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகாலை நேரத்தில் டீசல் திருட்டில் ஈடுபட்டு வந்தனார்.

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்படும் லாரிகளில் இருந்து டீசல் திருடும் கும்பலை பிடிக்க மூன்று மாநில போலீஸார் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து டீசல் திருட்டு கும்பலை பிடிப்பதற்காக மாநில எல்லைகளில் தொடர்ந்து ரகசிய கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், சித்தூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, லாரியில் வந்த ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

பிடிபட்டவர்கள் கூறிய தகவலின்படி வேட்டையை தொடங்கிய போலீஸார் சித்தூர் அருகே மேலும் இரண்டு லாரிகளில் இருந்து 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அனைவரும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அதிகாலையில் சாலையோரம் லாரிகளை நிறுத்திவிட்டு டிரைவர்கள் தூங்கும் போது இந்த கும்பல் பெரிய கேன்களில் டீசலை திருடி, தாவூத் என்பவனிடம் விற்பனை செய்து வந்துள்ளனர்.

டீசல் திருடுவதை யாராவது பார்த்துவிட்டால் அவர்களை இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வதையும் இக்கும்பல் வாடிக்கையாக கொண்டிருந்தது. இந்தநிலையில் டீசல் கொள்ளையர்கள் 11 பேர், திருட்டு டீசலை வாங்கும் தாவூத் அனைவரையும் கைது செய்த போலீஸார், 2,100 லிட்டர் டீசல் ,4 லாரிகள், ரொக்கப்பணம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

click me!