பிறந்த நாள் கொண்டாட மகளை கோவா அனுப்பி வைத்த பெற்றோர்.. அடுத்த நாள் சடலமாக திரும்பிய கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Sep 28, 2021, 1:37 PM IST
Highlights

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்தப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பெற்றோர்கள் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்த நிலையில், அந்தப் பெண் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியா மாவட்டம் சேர்ந்தவர் பணிக் குமார், ஜெயலலிதா தம்பதியினர். இவர்கள் இருவரும் மாவட்டத்தில் பிரபல மருத்துவர்களாக இருந்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரே மகள் நேஹா (24), கடந்த ஆண்டு நேஹா எம்பிபிஎஸ் முடித்த நிலையில், மேற்படிப்புக்கு தயாராகி வந்தார். அவரை எப்படியாவது மருத்துவராக்கி தங்களது மருத்துவமனையின் பொறுப்பை அவரிடம் வழங்கவேண்டுமென பெற்றோர்கள் திட்டமிட்டிருந்தனர். 

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று அவருக்கு பிறந்தநாள், பிறந்த நாளை கோவாவுக்கு சென்று நண்பர்களுடன் கொண்டாட வேண்டுமென நேஹா விரும்பினார். உடனே அவரது ஆசையை நிறைவேற்ற, அவரது பெற்றோர்களும் நண்பர்கள் மட்டும் சில உறவினருடன் மகளை கோவாவுக்கு அனுப்பி வைத்தனர். சனிக்கிழமை நள்ளிரவு கேக் வெட்டி நேஹா பிறந்தநாள் கொண்டாடினார். பெற்றோர்களும், வீடியோ காலிங் அவரது  பிறந்தநாள் கொண்டாட்டத்தை கண்டு மகிழ்ந்தனர். பின்னர் அன்று இரவு மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்ற நிலையில், காலையில் அவர்களை நிலைகுலைய வைக்கும் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வந்தது. அவரது மகள் அதிகாலையில் மாரடைப்பால் இருந்ததாக தொலைபேசியில் தகவல் கூறப்பட்டது. 

செல்லமாக வளர்த்த ஒரே மகள், இறந்துவிட்டமாக வந்த செய்தி பெற்றோர்களை நிலைகுலையச் செய்தது. அந்த செய்தியைக் கேட்டு பெற்றோர்கள் கதறினார், பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என மகள் விரும்பியதால்தான் கோவா அனுப்பினோம், இப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தால் அனுப்பி இருக்க மாட்டோமே என கதறினர், பின்னர் மகள் இறப்புச் செய்தியைக் கேட்ட பெற்றோர்கள் வேகவேகமாக ஹைதராபாத் புறப்பட்டனர், பின்னர் உடல் கோவையில் இருந்து ஐதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 

click me!