
பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தலைவர்கள் சிலை சேதப்படுத்துவது தொடர்கதையாக இருந்து வருகிறது. குறிப்பாக பெரியார், அம்பேத்கர் சிலைகள் மர்ம நபர்களால் சேதப்படுத்துவதும் பின்னர் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே நெடுவரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது.
இந்த சிலையின் முகம், கையை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சோழவரம் போலீசார் அம்பேத்கர் சிலையை துணியால் மூடினர். இதனைத் தொடர்ந்து அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.