
ஆசைக்கு இணங்க மறுத்ததால் 2 குழந்தைகளின் தாய் நடுரோட்டில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தங்கையின் கணவனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த தகரகுப்பம் ஒட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிசாமி. இவரது மனைவி கவுதமி (32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கவுதமியின் கணவர் முனுசாமி சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால், குடும்பத்தின் வறுமை காரணமாக கவுதமி ராணிப்பேட்டையில் உள்ள ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதையும் படிங்க;- உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரை போட்டு தள்ளிய கொடூரம்.. போலீசில் மனைவி சொன்ன பகீர் வாக்குமூலம்.!
கவுதமியின் தங்கை பிரியா. இவரது கணவர் சஞ்சீவிராயன்(35), கூலித்தொழிலாளி. தனிமையில் இருக்கும் கவுதமியை எப்படியாவது அடைய வேண்டும் என திட்டமிட்டார். அடிக்கடி கவுதமி வீட்டுக்கு சென்று ஆசைக்கு இணங்கும்படி சஞ்சீவிராயன் டார்ச்சர் கொடுத்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், பொறுமை இழந்த கவுதமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சஞ்சீவிராயனை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இதனால், ஆத்திரத்தில் இருந்து வந்த தங்கையின் கணவர் சஞ்சீவிராயன் கவுதமி வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வழிமறித்து ஆபாசமாக பேசி இரும்பு கம்பி மற்றும் கருங்கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த கவுதமி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சீவிராயன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சஞ்சீவிராயனை தேதடி வருகின்றனர்.
இதையும் படிங்க;- என்ன லவ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா.. உல்லாசத்துக்கு மறுத்த காதலி.. கதறவிட்ட காதலன்..!