ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேல் (40), சரவணன்(35). இருவரும் பாமகவில் இளைஞரணி பொறுப்பில் இருந்து வந்தனர். சரவணன் அப்பகுதியில் மெக்கானிக் கடையும் நடத்தி வந்தார்.
வாலாஜாபேட்டை அருகே பாமக நிர்வாகிகள் இரண்டு பேர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேல் (40), சரவணன்(35). இருவரும் பாமகவில் இளைஞரணி பொறுப்பில் இருந்து வந்தனர். சரவணன் அப்பகுதியில் மெக்கானிக் கடையும் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், குழந்தைவேல் மற்றும் சரவணன் இருவரும் மது அருந்திவிட்டு பெட்ரோல் பங்க் அருகில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் மர்ம கும்பல் வந்தது.
இதையும் படிங்க;- கோவிட் பணியின் போது பாலியல் பலாத்காரம்.. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவருக்கு 10 ஆண்டு சிறை.!
உயிர் பயத்தில் இருவரும் ஓடினர். ஆனால், அந்த கும்பல் விடாமல் ஓட ஒட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். இதில், சம்பவ இடத்திலேயே குழந்தைவேலு உயிரிழந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சரவணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இரட்டை கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை அரங்கேறியதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு தினத்தில் பாமக நிர்வாகிகள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. சினிமா பாணியில் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு கணவனை தூக்கிய எஸ்.ஐ. மனைவி..!