இதற்காகதான் அதிமுக பிரமுகரை கொடூரமாக கொன்றோம்.. கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்..!

By vinoth kumarFirst Published May 18, 2022, 7:44 AM IST
Highlights

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மனோகரன்(38). இவர் அதிமுகவின் பிரமுகரான இவர்  அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்ததால் 2வது முறையாக வெற்றி பெற்றார். 

மீஞ்சூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் கொலை தொடர்பாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மனோகரன்(38). இவர் அதிமுகவின் பிரமுகரான இவர்  அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்ததால் 2வது முறையாக வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 15ம் தேதி இரவு இவர் மீஞ்சூர் அடுத்த குருவிமேடு பகுதியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து விட்டு தனது மனைவி இரு மகள்களுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். குருவிமேடு அசோக் லைலாண்ட் கம்பெனி அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென கார் மீது மோதியது.

 

இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் சரிந்து சிக்கியது. அப்போது லாரியில் இருந்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 10 பேர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்து மனைவி சர்மிளா மற்றும் மகள்கள் கண்முன்னே மனோகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். 

இதனிடையே, சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இக்கொலையில் ஈடுபட்டதாக வெள்ளி வாயில் சாவடியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன், லாரியின் ஓட்டுநர் பத்மநாபன் அவரது உறவினர் அரவிந்த் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தொழில் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, கொலை சம்பவத்தில் ஈடுபட்ட நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ், ராஜ்குமார் என்ற பாட்டில் ராஜ், யுவராஜ் என்ற கில்லி யுவராஜ், ராஜேஷ் என்ற ஆகாஷ், பாலா என்ற யுவராஜ், மது கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்திய லாரி, 7 கத்தி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!