அதிர்ச்சி!! அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி படுகொலை.. மனைவி, மகள் கண்முன்னே மர்ம கும்பலின் வெறிச்செயல்..

By Thanalakshmi VFirst Published May 16, 2022, 10:03 AM IST
Highlights

சென்னை அடுத்த திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மனோகரன். இவர் அதிமுகவின் பிரமுகராக  அப்பகுதியில் செல்வாக்கு மிக்கவராக இருந்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் கொண்டகரை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு மனோகரன் வெற்றி பெற்றுள்ளார். 

மேலும் படிக்க: திமுக பிரமுகர் உடலை 8 துண்டாக்கி.. அடையாற்றில் தலை.. காசிமேட்டில் இதயம், நுரையீரல்.. அதிர வைக்கும் வாக்குமூலம்
 
இந்நிலையில் நேற்று இரவு இவர் மீஞ்சூர் அடுத்த குருவிமேடு பகுதியில் நடந்த குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக தனது காரில் தனது மனைவி, இரு மகள்களுடன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, அசோக் லைலண்ட்  நிறுவனம் அருகே டிப்பர் லாரி ஒன்று இவர் ஓட்டி வந்த கார் மீது பலமாக மோதியுள்ளது.

இதில் நிலைகுலைந்த கார் சாலையில் தலைக் குப்புறவிழுந்தது. அப்பொழுது, காரிலிருந்து இறங்கிய ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை லாரியில் இருந்த வந்த 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து லாரியில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க சென்ற மனோகரின் மனைவி மற்றும் மகளையும் அந்த கும்பல் அரிவாளால் வெட்டியுள்ளது.

இதனையடுத்து தவலறிந்து வந்த காவல்துறையினர், ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக விம்கோ நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். மர்மகும்பல் வெட்டியதில் காயமடைந்த மனோகரனின் மனைவி மற்றும் மகள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து உயிரிழந்த மனோகரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்த, மீஞ்சூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

அரசியல் கட்சியை சேர்ந்தவர் என்பதால் அரசியல் முன்பகை காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா அல்லது மனோகரன்  ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருவதால், தொழில் போட்டியின் காரணமாக இந்த கொலை நடைபெற்ற இருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை முடுக்கிவிட்டுள்ளனர். 

மேலும் படிக்க: பொது வெளியில் பெண் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

click me!