பொது வெளியில் பெண் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

Nandhini Subramanian   | Asianet News
Published : May 16, 2022, 09:56 AM IST
பொது வெளியில் பெண் வழக்கறிஞரை கொடூரமாக தாக்கிய நபர்- வைரலாகும் வீடியோ.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

சுருக்கம்

வழக்கறிஞர் தன்னை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக மகாந்தேஷ் தெரிவித்து இருக்கிறார். இருவரும் ஏற்கனவே பலமுறை சண்டை போட்டுக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.   

கர்நாடக மாநிலத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை நபர் மிக கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்  வைரல் ஆகி வருகிறது. பொது வெளியில் பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தின் பாகல்கோட் மாவட்டத்தின் வினாயக் நகர் பகுதியில் வழக்கறிஞர் சங்கீதா என்பவரை அருகாமையில் வசிக்கும் மகாந்தேஷ் பொது வெளியில் வைத்து மிக கொடூரமாக தாக்கினார். பெண்ணின் கண்ணத்தில் தொடர்ச்சியாக அறைந்த மகாந்தேஷ், ஒருகட்டத்தில் அங்கிருந்த நாற்காலியை எடுத்து தற்காத்து கொள்ள சங்கீதா முயற்சித்தார். எனினும், மகாந்தேஷ் தொடர்ச்சியாக தாக்கிக் கொண்டு இருந்தார். 

கொடூர தாக்குதல்:

மகாந்தேஷ் வழக்கறிஞர் சங்கீதாவை கொடூரமாக தாக்கும் சம்பவம் வீடியோவில் தெளிவாக பதிவாகி இருக்கிறது. வீடியோவில் மகாந்தேஷ் சங்கீதாவை வெறிப்பிடித்த நிலையில், அதிவேகமாக தாக்கிக் கொண்டிருப்பது தெரிகிறது. பொது வெளியில் இந்த தாக்குதல் நடந்த நிலையில், அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த யாரும் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. 

பொது நல வழக்கு தொடர்பான முன் விரோதம் காரணமாக மகாந்தேஷ் வழக்கறிஞர் சங்கீதாவை இப்படி தாக்கினார் என போலீசார் தெரிவித்து உள்ளனர். வழக்கறிஞர் தன்னை துன்புறுத்தி கொடுமைப்படுத்தியதாக மகாந்தேஷ் தெரிவித்து இருக்கிறார். இருவரும் ஏற்கனவே பலமுறை சண்டை போட்டுக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. 

இம்முறை மகாந்தேஷ் நடத்திய கொடூர தாக்குதலை அடுத்து, போலீசார் மகாந்தேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. பொது வெளியில் பெண் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் அடங்கிய வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!