திமுக பிரமுகர் உடலை 8 துண்டாக்கி.. அடையாற்றில் தலை.. காசிமேட்டில் இதயம், நுரையீரல்.. அதிர வைக்கும் வாக்குமூலம்

Published : May 16, 2022, 08:24 AM ISTUpdated : May 16, 2022, 08:26 AM IST
திமுக பிரமுகர் உடலை 8 துண்டாக்கி.. அடையாற்றில் தலை.. காசிமேட்டில் இதயம், நுரையீரல்.. அதிர வைக்கும் வாக்குமூலம்

சுருக்கம்

சக்கரபாணிக்குத் தெரியாமல் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக தமீம்பானு மணலியிருந்து ராயபுரம் பகுதிக்குக் குடியேறியிருக்கிறார். சமீபத்தில் தமீம்பானு ராயபுரத்தில் வசிக்கும் தகவல் சக்கரபாணிக்குத் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, முன்பு வட்டிக்குக் கொடுத்த பணத்தைக் கேட்பது போல அடிக்கடி வீட்டுக்குச் சென்று தமீம்பானுவை வற்புறுத்தி தனிமையில் இருந்திருக்கிறார். 

சென்னை ராயபுரத்தில் கடந்த 10ம் தேதி காணாமல் போன திமுக பிரமுகர் சக்கரபாணியை 8 துண்டுகளாக வெட்டி அடையாற்றில் தலையும்,  காசிமேட்டில்  குடல் மற்றும் இதயம், நுரையீரலை வீசியதாக கைதானவர்கள் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளனர். 

திமுக வட்ட செயலாளர்

சென்னை திருவொற்றியூர் செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). இவர் திருவொற்றியூர் 7-வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். மேலும், அந்த பகுதியில் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த 10-ம் தேதி வீட்டை விட்டு வெளியில் சென்ற சக்கரபாணி நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சக்கரபாணியின் செல்போன் நம்பரை வைத்து டவர் லொகேஷன் மற்றும் சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில், ராயபுரம் கார்டன் 3வது சந்து பகுதியில் இருசக்கர வாகனம் இருப்பதை கண்டுபிடித்தனர். சக்கரபாணியின் செல்போன் அந்த பகுதியில் உள்ள தமீம்பானு என்பவரது வீட்டில் இருப்பதை டவர் லொகேஷன் மூலம் போலீசார் கண்டறிந்து அங்கு சென்றனர். 

சாக்கு மூட்டையில் உடல்

இதனையடுத்து, தமீம்பானு வீட்டிற்கு உள்ளே சென்றதும்  ரத்த வாடை வீசியது. பின்னர், தமீம்பானு என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி போது வீட்டின் குளியலறையில் சக்கரபாணி துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சக்கரபாணியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தமீம்பானு மற்றும் அவரின் தம்பி வாசிம் பாஷா இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களுடன் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுநர் டெல்லி பாபுவும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கள்ளக்காதல்

தமீம்பானு கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மணலியில் சக்கரபாணியின் வீட்டில்தான் வாடகைக்குக் குடியிருந்திருக்கிறார். அவரின் கணவர் அஸ்லாம் தி.நகரின் உள்ள ஒரு கடையில் தங்கி வேலைபார்த்ததால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். குடும்பச் சூழல் காரணமாக தமீம்பானு, சக்கரபாணியிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

ஓயாத டார்ச்சர்

இந்நிலையில்தான், சக்கரபாணிக்குத் தெரியாமல் தமீம்பானு மணலியிருந்து ராயபுரம் பகுதிக்குக் குடியேறியிருக்கிறார். சமீபத்தில் தமீம்பானு ராயபுரத்தில் வசிக்கும் தகவல் சக்கரபாணிக்கு எப்படியோ தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து, முன்பு வட்டிக்குக் கொடுத்த பணத்தைக் கேட்பது போல அடிக்கடி வீட்டுக்குச் சென்று தமீம்பானுவை கட்டாயப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இப்படி அடிக்கடி சக்கரபாணி வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்துவந்தது தமீம்பானுவுக்கு பிடிக்கவில்லை. அதேசமயத்தில், தமீம்பானு ராயபுரம் பகுதிக்கு மாறியபோது, அவரின் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் டில்லிபாபு என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க;-  "நான் உன்னுடைய பொண்ணுப்பா.. இதெல்லாம் தப்பு".. தலைக்கேறிய போதையால் மகளை பலாத்காரம் செய்த தந்தை.!

இந்நிலையில்தான், சக்கரபாணி கடந்த 10-ம் தேதி இரவு தமீம்பானுவின் வீட்டுக்குக் குடிபோதையில் வந்திருக்கிறார். அப்போது, தமீம்பானுவை வலுக்கட்டாயமாக உல்லாசத்திற்கு அழைத்திருக்கிறார். இருவரின் சத்தம் கேட்டு கீழ் வீட்டில் வசிக்கும் வாசிம் பாஷா அங்கு வந்திருக்கிறார். நடந்த விவரத்தைத் தனது தம்பியிடம் தமீம்பானு சொல்லிக் கதறியிருக்கிறார். வீட்டில் இருந்த அரிவாள்மனை மற்றும் கத்தியால் சக்கரபாணியை கொலை செய்துள்ளனர்.

காசிமேட்டில் இதயம், நுரையீரல்

மேலும், சக்கரபாணியின் தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்துள்ளனர். துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக அவரின் உடலிலிருந்து குடல் மற்றும் இதயம், நுரையீரல் மட்டும் தனியாக எடுத்து ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கல்லில்கட்டி கடலில் தூக்கி வீசியுள்ளனர். சக்கரபாணியின் தலையை அடையாறு ஆற்றில் கல்லைக்கட்டி வீசியிருக்கின்றனர். வீடு திரும்பியவர்கள் பெரிய கத்தியைக் கொண்டு சக்கரபாணியின் உடலைத் தனித் தனி துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு சாக்கு மூட்டையில் மொத்தமாகக் கட்டிவைத்திருக்கிறார்கள். வீட்டில் துர்நாற்றம் எதுவும் வெளியில் வந்துவிடக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் வாசனைத் திரவியங்களைத் தெளித்துள்ளனர். இதனையடுத்து, 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க;- கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோமோ.. கள்ளக்காதலனுக்கு மகளை விருந்தாக்கிய தாய்.. வீட்டிலேயே பிரசவம் பார்த்த அதிர்ச்சி

இதையும் படிங்க;-  சென்னை இரட்டை கொலை வழக்கு.. ஏன் புள்ளையா இப்படி செஞ்சான்? கண்ணீர் விட்டு கதறிய தந்தை..!

 

PREV
click me!

Recommended Stories

சினிமா மிஞ்சும் திகில்.. காட்டிக்கொடுத்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகள்.. பெண் கொலை வழக்கில் ஓய்வு பெற்ற காவலர் கைது
அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!