வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் வாங்கினால் சஸ்பெண்ட் ... போக்குவரத்து போலீசுக்கு ஆப்பு.. கூடுதல் ஆணையர் எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Aug 20, 2022, 5:02 PM IST
Highlights

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளிடம் பணமாகவோ அல்லது பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து கூடுதல் ஆணையர் கபில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் கடந்த 4 நாட்களாக நடந்து வந்த சிறப்பு வாகனத்தணிக்கை தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த கபில் குமார் சி.சரகத்  இவர் கூறினார்.

மேலும் அவர் கூறிய விவரம் பின்வருமாறு:- சென்னை மாநகரில் நம்பர் பிளேட் இல்லாமல் பழுதடைந்த பதிவு எண் பலகை களுடன் வாகனங்கள் இயங்குவதாக சென்னை போக்குவரத்து போலீசாருக்கு தொடர்ந்து தகவல் வந்தன, புகாரின் அடிப்படையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக சிறப்பு தணிக்கை நடத்தப்பட்டது இதன் மூலம் நம்பர் பிளேட் இல்லாமல் பழுதடைந்த நம்பர் பிளேட்வுடன் வந்த 800க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் மொத்தம் 828 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  பாலியல் உணர்வை தூண்டும் வகையில் ஆடை.. பெண்ணை மடியில் அமரவைத்து அசிங்கம்.. குற்றமே இல்ல , நீதிபதி கருத்து.

இதில் 98% இருசக்கர வாகனங்களே ஆகும், பழுதடைந்த நம்பர் பிளேட் உடன் வாகனங்களை இயக்கிய வாகன ஓட்டிகளுக்கு 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது மேலும் பதிவு எண் பலகை தொடர்பாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, பதிவு எண் பலகை இல்லாமல் வாகனம் ஓட்டி வந்தவர்கள் மீது குற்றப் பின்னணி உள்ளதா?

இதையும் படியுங்கள்: உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தோழிகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற கல்லூரி மாணவி.. வெளியான பரபரப்பு தகவல்

சம்பந்தப்பட்ட வாகனம் குற்ற வழக்குகளில் தொடர்புடையதா என்றும் விசாரணை நடத்தப்பட்டது. அப்படி ஏதும் கண்டு பிடிக்கப்படவில்லை பதிவு எண் பலகை பொருத்தப்படுவது கட்டாயமாகும், வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டறிவதற்கும், விபத்து ஏற்படும்போது சம்பந்தப்பட்ட வாகனங்களை அடையாளம் காண்பது போன்றவற்றிற்கு பதிவு எண் பலகை முக்கிய பங்கு வகிக்கிறது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பாக 100 வழக்குகள் வீதம் வருடத்திற்கு1 லட்சத்து 25 ஆயிரம் வழக்குகள் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளில் அபராதம் ரூ. 10 ஆயிரம் என்பதால் வாகனத்தின் மதிப்பே அவ்வளவு வராது என வாகன உரிமையாளர்கள் வாகனங்களை அங்கேயே விட்டுச் செல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருவதாக என கூறுகின்றனர்,

சாலை விதி மீறல்கள் தொடர்பாக அபராதத்தை வசூலிக்க பேடிஎம் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்ட க்யூ ஆர் கோடு முறை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்றார். அதேபோல் வாகன ஓட்டிகளிடம் சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையினர் பணமாகவோ, பொருளாகவோ லஞ்சம் வாங்கினால் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என அவர் எச்சரித்தார். 
 

 

click me!