
சென்னை, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜய். பிரபல ரவுடியான இவருடைய மனைவி ஸ்ருதி. பட்டதாரியான இவருக்கும், விஜய்க்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் விஜய், தனது மனைவியை அடித்து துன்புறுத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த ஸ்ருதி, எண்ணூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடி விஜயை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதன்பிறகு கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காத ஸ்ருதி, திருவொற்றியூர் என்.டி.ஓ. குப்பம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தனது தோழி ஐஸ்வர்யா என்பவரது வீட்டில் தனது குழந்தையுடன் அடைக்கலம் புகுந்தார்.
மேலும் செய்திகளுக்கு..கள்ளக்குறிச்சி சிசிடிவி வீடியோ உண்மை இல்லை.! இதுலயும் லேட்டா ? காவல்துறையை வறுத்தெடுக்கும் மக்கள்
ஐஸ்வர்யாவின் கணவர் பெயர் சூரஜ் ஜெனிஸ் கண்ணா. ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சூரத் ஜெனிஸ் கண்ணாவும், அவருடைய மனைவி ஐஸ்வர்யாவும் சேர்ந்து தங்களிடம் அடைக்கலம் தேடி வந்த சுருதியின் கருமுட்டையை எடுத்து சட்டவிரோதமாக விற்பனை செய்ய திட்டமிட்டனர். ஸ்ருதிக்கு ரூ.20 ஆயிரம் கொடுப்பதாக கூறினர். ஆனால் ஆஸ்பத்திரியில் சென்று விசாரித்த போது கருமுட்டை பெற ரூ.50 ஆயிரம் வரை கொடுப்பதாக தெரிவித்தனர்.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பயந்து போன ஸ்ருதி, இது பற்றி பிரிந்துபோன தனது கணவர் விஜயிடம் போனில் தெரிவித்தார்.தன்னை ஏமாற்றிய தோழி ஐஸ்வர்யாவின் வீட்டுக்கு சென்று சொல்லிவிட்டு வருகிறேன் என்று கூறிய ஸ்ருதி, தோழி ஐஸ்வர்யா வீட்டுக்கு சென்றார். அங்கு கருமுட்டை கொடுக்காமல் திரும்பி வந்ததால் ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவும், அவருடைய கணவர் சூரஜ் ஜெனிஸ் கண்ணாவும் சேர்ந்து கத்தியின் பின்புறத்தால் ஸ்ருதியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும் அவரை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர். அங்கிருந்து தப்பிய ஸ்ருதி, இதுபற்றி திருவொற்றியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் காதர் வழக்குப்பதிவு செய்து கருமுட்டையை விற்க மறுத்த பட்டதாரி பெண்ணை சித்ரவதை செய்த ரவுடி சூரஜ் ஜெனிஸ் கண்ணா, அவருடைய மனைவி ஐஸ்வர்யா ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு.! எப்போது தெரியுமா ?